விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்

84

170 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2018-19 கணக்கெடுப்பு படி டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

விப்ரோ ஒப்பிடுகையில், முந்தைய நிதி ஆண்டில் 3.8 சதவீதம் வரை 8.12 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.2018ஆம் நிதியாண்டில் முழுவதுமாக விப்ரோ 8.06 பில்லியன் டாலர் வருவாயும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.84 பில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பெற்றது.

ஹெச்சிஎல் நிறுவனத்தில் (HCL COMPANY) மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ரூபாய் 2568 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் லாபம் 15% அதிகரித்துள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் முந்தைய நிதியாண்டில் ரூபாய் 2230 கோடியாக இருந்தது. மேலும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருமானம் 21% அதிகரித்து ரூபாய் 15990 கோடியாக உள்ளது. வரும் நிதியாண்டில் 14% முதல் 16% வரை வருமானம் அதிகரிக்கும் என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டின் முழுமைக்குமான லாபம் 16% அதிகரித்து ரூபாய் 10123 கோடியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து வருமானம் 19% அதிகரித்து ரூபாய் 60427 கோடியாக உள்ளது என ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்சிஎல் நிறுவனம் (HCL IT COMPANY) தனது ஐடி நிறுவனத்தை அதிகரிக்கவும், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

You might also like