Hard Diskன் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு

854

 1,742 total views

உணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணினியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கணினி இயங்குவதற்குத் தேவையான மென்பொருட்கள் கணினியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் hard diskகிலேயே பதிவாகின்றன. கணினி  கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் hard diskகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. Disk அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கையடக்க hard diskகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற அளவில் தற்போது hard disk வந்துவிட்டது. இந்த அளவை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

இதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கணினி மிக முக்கியமான பகுதி hard disk. பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.

டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணினி hard disk data recording  திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Hard disk தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது hard diskன் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது disk கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கணினிக்கோ இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி hard diskன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.

You might also like

Comments are closed.