கூகள் ஊழியர் இறந்த பின்னும் பாதி சம்பளம் கணவன் அல்லது மனைவிக்கு கிடைக்கும்
801 total views
கணினி வல்லுநர்கள் வேலை செய்ய மிகச் சிறந்த சூழலை உருவாக்குவதில் கூகள் நிறுவனம் தான் முதன்மையில் உள்ளது.
இலவச சாப்பாடு
குழந்தைகளை அலுவலகத்தில் பேண வசதி.
சிகை அலங்காரம்
உடற்ப்பயிற்சி நிலையம்
உள் அரங்கு விளையாட்டுக்கள்
இவை அனைத்தையும் அதன் அலுவலக வளாகத்தில் அமைத்துள்ளது கூகள்.
இந்த வரிசையில், ஒரு வேலை தனது அலுவலர் எவரேனும் இறந்துவிட்டால் அவரின் சம்பளத்தில் பாதி, மாதா மாதம் அவரின் கணவன் அல்லது மனைவிக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு கொடுக்கப்படும்.
இந்த புதிய அறிவிப்பால் அதன் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனாலும் இது புதிய சர்ச்சையை உருவாகியுள்ளது.,
இந்த சலுகை ஒரே பாலின திருமணம் (ஆண் – ஆண் / பெண்-பெண்) செய்த ஊழியருக்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும்.. கோவக்கார மனைவிகள் தமது கணவரை போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள் என நகைச்சுவை விமர்சனங்களும் எழுந்துள்ளன.
Comments are closed.