அதிக முதலீடு பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் பிளிப்கார்ட்க்கு 3ம் இடம்!​

1,849

 1,004 total views

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் மின்னணு வணிகத்தில்  ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம் உலக அளவில் அதிக முதலீடுகளை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் பட்டியலில் 3ம் இடம் பெற்றுள்ளது.

ஜப்பானின் தொலைத்தொடர்பு நிறுவனமான சாப்ட்பேங்க் (SoftBank) நிறுவனத்தின் சமீபத்திய  புதிய 2.4 பில்லியன் டாலர் முதலீட்டையும் சேர்த்து மொத்தம் 7 பில்லியன் டாலர்கள் (1 பில்லி$ = 6400 கோடி ரூபாய்)  முதலீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

வீட்டில் குடியிருந்துகொண்டே ஒரு அறையை உள்வாடகைக்கு விடும்

AirBNB​ – 3.3 ​பில்லியன்

அலுவலக இடத்தை உள்வாடகைக்கு விடும் இணையதளம்
WeWork – 2.7 பில்லியன்
 
நிழற்படங்களை சேகரித்து பதிவிடும் சமூக தொடர்பு இணையதளம்
Pinterest 1.5 பில்லியன்
 
சீனாவின் வாடகை வாகனங்கள் தேடி பயன்படுத்தும் இணையதளம்
Didi Chuxing – 15 பில்லியன்
அமெரிக்காவின் வாடகை வாகனங்கள் தேடி பயன்படுத்தும் இணையதளம்
Uber – 12.9 பில்லியன்
முதலீடுகளுடன் உள்ளன, இந்த முதல் 10 பட்டியலில் 4 நிறுவனங்கள் வாடகை வாகனங்கள் பயன்படுத்த உதவும் தளங்கள். அமெரிக்காவின் Lyft , இந்தியாவின் Ola வும் இந்த முதல் 10 பட்டியலில் உள்ளன. இந்த பட்டியலில் உள்ள ஒரே இணைய வர்த்தக நிறுவனம் பிளிப்கார்ட்.
இந்தியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்வது பலனளிக்கும் எனும் நம்பிக்கையை பிளிப்கார்ட்டில் முதலீடு செய்துள்ள டைகர் குளோபல், மைக்ரோசொப்ட் போன்ற முதலீட்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன.
பிளிப்கார்ட்டின் இந்த வளர்ச்சி இந்தியாவில் உள்ள பிற நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் வளர்ச்சியாகவே இருக்கும் என Lightbox எனும் இந்திய முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர் நிதின் சர்மா சொல்கிறார். ஆனால் பிளிப்கார்ட்க்கு முதலீடு  softbank ன் நோக்கம் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமே. இது போன்ற அதீத முதலீடுகள் குவிவது இன்னும் 2-3 வருடங்கள் நீடிக்கும் என்றும், அதிக முதலீடு பெறுவது மற்ற போட்டியாளர்களை விட உங்களை உச்சத்தில் வைத்தாலும் , அதிக முதலீடு பெறுவதே வெற்றியாகாது, பிற நிறுவனங்களை விட அதிக லாபம் சம்பாபிப்பதே வெற்றி என இந்தியாவின் முதல் இணைய வர்த்தக தளமான FabMart (IndiaPlaza என அழைக்கப்பட்ட) நிறுவனத்தின் உப – நிறுவனர் வைத்தீஸ்வரன்தெரிவித்தார் .
நிறுவனத்தின் மொத்த மூலதன மதிப்பாக(Valuation) 15 பில்லியன் டாலருடன் பிளிப்கார்ட் 9ம் இடத்திலும் Uber  நிறுவனம் 68 பில்லியன் டாலருடனும் உள்ளது. நிறுவனத்தின் மூலதன மதிப்பு (Valuation) என்பது நேரடியான பண மதிப்பு மட்டும் அல்லாமல் பல காரணிகளை (நற்பெயர், எதிர்கால வளர்ச்சி கணிப்பு, புதிய சந்தைகள், லாபம்) கொண்டு கணக்கிடப்படுகிறது.  சிலிக்கான் வேலியில் பல புதிய நிறுவனங்கள் சாதாரணமாக 100 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படும் ஆனால்  அவற்றில் ஒரு டாலர் கூட லாபம் இல்லாமல் பல்லாயிரம் டாலர் நட்டத்துடன் பல மாதங்களாக இயங்கிவரும்.

You might also like

Comments are closed.