மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்

536

 1,919 total views

அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது.  கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின் பிரச்னை.

இணைய இணைப்பே இல்லாத மக்களும் குறைந்த விலையில் புதிய இணைய இணைப்பை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகநூல் நிறுவனம் Samsung, Ericsson , MediaTek, Nokia, Opera and Quallcomm ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து Internet.org எனும் ஒரு சேவையை துவங்கியுள்ளது.

உலகில் உள்ள இணைய இணைப்பு இல்லாத 5 பில்லியன் மக்களிடம் இணைய இணைப்பை கொடுப்பதே இவர்களின் நோக்கம்.

1. Making access affordable

மலிவு விலையில் கைபேசிகள் உற்பத்தி செய்தல் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவது.

2. Using data more efficiently

தரவு சுருக்குதல் (Data Compression), தன் நினைவுகொள்தல் (data caching) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அனுப்பப்படும் தரவுகளை மேம்படுத்துதல்.

3. Helping businesses drive access

அதிக மக்களை இணையம் பயன்படுத்த வைக்கும் நிரலாளர்கள் (Programmers), வன்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்குவித்து வணிக நிறுவனங்கள் தங்களின் வணிகத்தை இணையம் வழியாக மேற்கொள்ள ஊக்குவித்தல்.

கூகல் நிறுவனம் ஏற்கனவே லூன் (Project Loon)  எனும் பெயரில் இணைய இணைப்பு இல்லாத தொலை தூர இடங்களில் ராட்சத பலூன்கள் மூலம் 3G  அலையை வழங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா முழுவதும் SMS வழியாக இலவசமாக GMail பயன்படுத்தும் வசதியையும் கொடுத்தது.

Twitter நிறுவனமும் கைபேசி வழியாக Tweet அனுப்புவதார்க்கு மட்டும் இலவசமாக இருக்குமாறு பல சர்வதேச இணைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

Zuckerberg கூறுகையில்  இணைய இணைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை என்றும் (கல்லூரி விடுதி கண்காணிப்பாளர்கள் கவனத்திர்க்கு) தமது நிறுவனம் 1பில்லியன் டாலர் வரை இணைய இணைப்பு வழங்கும் சேவைகளுக்காக செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

You might also like

Comments are closed.