முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள facebook-ல் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் இந்த facebook ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல facebook பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே facebook குளத்தில் குதித்துள்ளார் கலாம்.
http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் facebook முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட விருப்பதாரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டி ஓடி விட்டது.
தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அதில் பேசிய பேச்சுக்கள், அது தொடர்பான புகைப்படங்கள், இளைஞர்களுக்கும் இந்தியர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என தனது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கலாம் இந்த facebook-ல்.
தான் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்று ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறியபோது, அதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் வெளியான கார்ட்டூனையும் கூட போட்டு அசத்தியுள்ளார் கலாம்.
ரொம்ப அருமையாக உள்ளது இந்த பக்கம், போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு வாருங்கள்…
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
Comments are closed.