விளம்பரம்: உங்க அஸ்தியை விண்வெளிக்கு அனுப்ப வேண்டுமா?
1,800 total views
அவர் “மேல” போய்ட்டார்னு சொல்லுவாங்க., ஆனா செத்த அப்றோம் ஒருத்தர் மேலயா போறார்? ஆறடி குழிக்குள்ள இல்லனா ஏதோ ஆத்துல , கடல்ல கரைச்சு விட்டுட்டு இருக்கோம்.
நீங்களோ இல்லைனா உங்களுக்குப் பிடிச்சவங்க இறந்த அப்போறம் அவுங்க அஸ்திய எங்க கம்பெனி தரும் ஒரு டப்பா உள்ள போட்டு அந்த டப்பாவ எங்களுக்கு கூரியர் அனுப்புங்க. நாங்க உங்கள் பிரியமானவரோட அஸ்திய அந்த பரலோகம் இருக்கும் திசை நோக்கி விண்வெளிக்கு அனுப்புவோம்.
இந்த சேவைக்கு நீங்கள் முன் பதிவு செய்து கட்டணம் $2000 (ஒரு லட்சத்தி இருபது ஆயிரம்) செலுத்த வேண்டும்.. அமெரிக்காவில் ஒரு இழவு நிகழ்ச்சி நடத்தி, பளிங்குக் கல்லில் கல்லறை கட்ட $6000 செலவு ஆகிறது. ஆகையால் எங்கள் நிறுவனத்தின் கட்டணம் மிகவும் குறைவு.
இந்த வீணாப் போன வேலைய செய்வது அமெரிக்காவில் உள்ள “எல்சியும்” என்கிற நிறுவனம்.
இது மட்டும் இல்ல., அனுப்பிய அந்த அந்த அஸ்தி டப்பா இப்போ விண்வெளில எங்க சுத்திக் கிட்டு இருக்குனு Tracking பன்னி பார்க்க ஒரு Android Applicationனும் தருகிறார்கள்.

எனக்கு தத்தனேரி மின்சார சுடுகாட்டுல பாதில கரண்ட் கட் ஆச்சுனா என்னா பண்ணுவாங்கனு ஒரு சந்தேகம்., உங்களுக்குத் தெரியுமா?
Comments are closed.