காக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு ஆபத்து
912 total views
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அதிகாரிகளுக்கு 117 பில்லியன் டாலர்களையும் அளித்துள்ளது கவனிக்கதக்கது. இந்த காரணத்தினால் இந்த நிறுவனத்தின் இயக்க தொகை (operating margin) 13.1 சதவிகிதமாக குறைந்துள்ளது எனவும். இதுவே டிசம்பர் காலாண்டில் 16.8 சதவிகிதமாக இருந்ததும் கவனிக்கதகக் விஷயமாகவே உள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் காக்னிசண்ட் நிறுவனம் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டது என்றாலும், இதன் ஊழியர்களில் பெரும்பகுதி இந்தியர்கள் தான். நியூஜெர்சியை அடிப்படையாக கொண்டுள்ள இந்த நிறுவனத்திலிருந்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என்று கருத்தப்படுகிறது.
காக்ணிசண்ட் நிறுவனம் 1994-ல் நிறுவப்பட்டதிலிருந்து இது தான் மிக குறைந்த வளர்ச்சியே என்று இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார். மேலும் இந்த மெதுவான வளர்ச்சி எங்கள் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால் என்றும் கூறினார்.
கடந்த ஜனவரி – டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மிக மந்த நிலையிலேயே காணப்பட்ட அவுட்ஸோர்சிங்க் பற்றிய பணிகளும் வெகுவாக குறைந்துள்ளன. இதையடுத்து இந்த நிறுவனம் தற்போது ஒரு மறு சீரமைப்பு திட்டத்தினை உருவாக்கியுள்ளது என்றும், இதன் படி கூடுதலான பணியாளர்கள் உள்ளனர் என்றும் காக்ணிசண்ட் தெரிவித்துள்ளதாம்.
இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டால் பல ஆயிரம் இந்திய ஊழியர்கள் வேலையிழக்கும் சூழ்நிலை உள்ளது.
Comments are closed.