தனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்

654

 942 total views

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர “சொந்த கால் டாக்சி” ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வருகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து அந்த வாகன ஓட்டியைத் தாக்குவது, பாரீஸ் விமான நிலையத்திற்கு செல்லும் அந்த கால் டாக்சிகளை வழி மறித்து பயணிகளை இறக்கி விட்டு டாக்சியை தீ வைத்துக் கொளுத்துவது என முழுமையாக அந்த நிறுவனத்தை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றும் பணியை உள்ளூர் கால் டாக்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். ​​நம் ஊர்களில் ஒவ்வொரு வகை கால் டாக்சி நிறுவனங்கள் உள்ளன.​ ஒரு கால் டாக்சி நிறுவனம் மட்டுமே உலக அளவில் பல நாடுகளில் இயங்கி வருகிறது. அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பல்வேறு பண முதலைகள் பல மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அந்த கால் டாக்சி நிறுவனத்தின் பெயர் உபெர் (Uber)​

 இதன் மூல காரணம் என்னவெனில், ஒருவர் உள்ளூரில் டாக்ஸி ஓட்டியாக உரிமம் பெற கிட்டத்தட்ட 20000 பவுண்ட் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கான இதர வரிகளும் உள்ளது. ஆனால் ஒருவர் உபெர் டாக்சி வாகன ஓட்டியாக இருக்க எந்த ஒரு பதிவுக் கட்டணமும் அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை. காலம் காலமாக கட்டணம் செலுத்தி உள்ளூரில் டாக்சி ஒட்டி பிழைப்பு நடத்தி வரும் வாகன ஓட்டிகளின்  பயணக் கட்டணத்தை விட உபெர் பயணக் கட்டணம் பிரபலமான வழித்தடங்களில் (விமான நிலையத்தில் இருந்து ஈபிள் கோபுரம்) குறைவாக உள்ளது.

இந்தியாவில் டெல்லியில் இருந்த ஒரு உபெர் வாகன ஒட்டி பயணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நினைவில் இருக்கலாம். பல்வேறு நாடுகளில் தங்களின் பிரான்டிற்கு (உபெர்) கிடைக்கும் அவப்பெயரை நீக்க பல கோடிகள் செலவு செய்து முயன்று வருகிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் இருக்கும் பெரும் முதலீட்டார்கள் புற்றீசல் போல் புதியதாக ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு கால் டாக்சி நிறுவனத்திலும் பல மில்லியன்களை முதலீடு செய்து வருகின்றனர். அளவுக்கதிகமாக ஒரே வகை நிறுவனங்களில் முதலீடுகள் குவிவது “பபுள்” bubble எனப்படும் முதலீட்டுத் தேக்க & திவால் நிலைக்கு அந்த நிறுவனங்களைத் தள்ளும். உலகின் பெரிய நிறுவனமான உபெர் சந்திக்கும் இந்த பிரச்சனைகள் பிற புதிய சிறிய நிறுவனங்கள் இந்த தொழிலுக்கு வர விடாமல் தடுக்கும்.


மதுரையில் முன்னர் நான் Ola கால் டாக்சி பயன்படுத்தும் போது அந்த வாகன ஓட்டிகள் சிறப்பாக அனைத்து வழித்தடங்களிலும் செல்ல முன் வருவர். இப்பொழுது அவர்கள் சில வழித்தடங்களில் வர மறுக்கின்றனர். ஆனால் இவர்களின் கட்டணம் ஆட்டோ கட்டணத்தை விட குறைவாகவே பல நேரங்களில் இருக்கிறது.

 

You might also like

Comments are closed.