அமேசான் நிறுவனமும் விண்ணுக்கு போய் திரும்பி வரும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

213
பொதுவாக விண்ணில் ஏவிய ராக்கெட் தன்னுள் உள்ள செயற்க்கைகோளை விண்ணில் நிறுத்தி விட்டு தான் கடலை நோக்கி விழுந்து நொறுங்கும். இதனால் மீண்டும் மீண்டும் கோடிகளை கொட்டி அரசுகள்  புதிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சனையை புரிந்த இரண்டு பெரும் தொழிலதிபர்கள் மேலே ஏவப்படும் ராக்கெட்டுகள் மீண்டும் குறிப்பிட்ட இடத்தில செங்குத்தாக வந்து நிற்கும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.

யார் அந்த தொழிலதிபர்கள்?

Tesla மோட்டார்ஸ் எனும் மின்கலனில் இயங்கும் கார்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்யும் இலன் மஸ்க் என்பவரும் , அமேசான் இணையதள உரிமையாளர் ஜெப் போயேஸ் எனும் இரு பண முதலைகள் தான் இந்த ராக்கெட்களை  தனித் தனியே SpaceX (Tesla) , BlueOrigin (Amazon) நிறுவனங்கள் மூலம் உருவாக்கியுள்ளனர்.

இதில் அமேசான்னின் ராக்கெட்டுகள் விண்வெளியில் 4 நிமிடங்கள் வரை மனிதர்கள் அதி உயரத்தில் இருந்து பூமியை வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பி பூமிக்கு வரும் வகையில் ஒரு பொருள்காட்சி ராட்டினம் போல இதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். டெஸ்லா நிறுவனம், அரசாங்கங்கள் இவர்களின் ராக்கெட் மூலம் குறைந்த செலவில் செயற்கைகோள்களை ஏவ இதை ஒரு வாடகை ராக்கெட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தங்களின் முதல் நிறுவனங்களில் வந்த லாபத்தை வைத்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு செலவிடும் இந்த தொழிலதிபர்களை  நமது ஊர் தொழிலதிபர்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் ஒன்று நன்றாகத் தெரியும். தங்கள் லாப பணத்தை வைத்து புதிய முதலீடு செய்து அதைவிட அதிக லாபம் சம்பாரித்து அதை வைத்து அடுத்து அதிக லாபம் சம்பாரித்து வாழ் நாள் முழுவதும் வங்கி கணக்கில் புதிய இலக்கங்களை அடைவதையே இலக்கா கொண்டு வாழ்கையை சவால் அற்ற பணம் எண்னும் எந்திரம் போல தன்னை மாற்றும் தொழிலதிபர்களுக்கும், தன் லாபத்தை வைத்து புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் என தன்னால் முடிந்த அளவில் செலவிடும் சிந்தனை திறன் மிக்க மனிதர்களுக்கும் உள்ள வித்யாசம் மட்டுமே.

You might also like

Comments are closed.