செயற்கை நுண்ணறிவுத் துறை பற்றிய 3 செய்திகள்

1,289

 694 total views

21ம் நூற்றாண்டை சேர்ந்த அனைவரும் செயற்கை நுண்ணறிவு பற்றி சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டும் – மைக்ரோசாப்ட்ன் கெவின் ஸ்காட்.

சாதாரண கணிப்பொறிக்கும், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட மென் பொருள், வன்பொருள் பற்றிய அறிமுகம் பற்றி இந்த நூற்றாண்டில் வசிக்கும் அனைத்து மனிதர்களும் தெரிந்துகொள்ளவேண்டும். ஏன் என்றால் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் இனி AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்துடன் நீங்கள் உரையாடவோ, பயன்படுத்தவோ, காணவோ செய்வீர்கள். என மைக்ரோசாப் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் (CTO – Chief Technical Officer) கெவின் ஸ்காட் சொல்கிறார்.

AI தொழில்நுட்பம் Terminator திரைப்படம் போல உலக அழிவுக்கு வித்திடலாம் எனும் அச்சம் இருக்கிறது, அதே வேளையில்  StarTerk திரைப்படம் போல மனித சமூக வளர்ச்சியின் உச்சத்திற்கு இதே தொழில்நுப்டம் உதவும் சாத்தியம் உள்ளத்தையும் நாம் மனதில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் அறங்கள் மையத்திற்கு முகநூல் 7.5 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கிறது.

ஐரோப்பா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து “The Institute for Ethics in Artificial Intelligence” எனும் ஆராய்ச்சி மையத்தை 2019 பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் உள்ள முனிச் தொழில்நுப்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கிறார்கள். இது பல துறைகளில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் தங்களுக்கு என எந்த வித அடிப்படை “அறம்” பேண வேண்டும் எனும் ஆய்வுகளை இந்த மையம் மேற்கொள்ளும். அதாவது எளிய உதாரணம் (மனிதர்களை சிறை/கொலை செய்துவிடக்கூடாது). இந்த மையத்திற்கு கூகள், ஆப்பிள், பெய்டு, அமேசான் போன்ற நிறுவனங்களும் நன்கொடைகள் வழங்கி வருகின்றன. இந்த மையத்திற்கு முகநூல் நிறுவனமும் தனது நன்கொடையை வழங்கியுள்ளது.

பெரு நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு கடந்த நான்கு வருடத்தில் 270% அதிகரித்துள்ளது.

பெரிய தொழில்துறை நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மென்பொருள் / வன்பொருட்களுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைத்து பயன்படுத்தும் விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் 270% அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு மட்டும் 37% அதிகரித்துள்ளதாக பிரபல தணிக்கை / புள்ளிவிவர நிறுவனம் Gartner தெரிவித்துள்ளது.  இந்த தொழில்நுட்பத்தால் மனித ஊழியர்களின் தேவை குறைவதால் வருடா வருடம் 1.2% தொழில்துறை வளர்ச்சி அடுத்த 10 வருடங்களுக்கு இருக்கும் என்றும், ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 20-25% அதிகமாக வரும் 12 ஆண்டுகளில் இருக்கும் எனவும் மற்றொரு புள்ளியியல் நிறுவனமான McKinsey Global Institute தெரிவித்துள்ளது.

You might also like

Comments are closed.