36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் மென்பொருள்

588

 1,600 total views

இன்றைய உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்து வருகின்றது.  ஆகவே பலர் பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி அதனை தடுக்க முயன்று வருகின்றனர்.   அந்த வகையில் surveillance camera மூலம் 36 மில்லியன் முகங்களை ஒரே second-ல் கண்டறியும் ஒரு சிறந்த மென்பொருளைக் கொண்ட கருவி (system) உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மென்பொருள் பொறியியளாளர்களால் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் பாதுகாப்புத்துறையில் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hitachi Kokusai என்ற இந்த முறைமை மூலம் உலகெங்கிலுமுள்ளவர்களின் முகங்களை உடனுக்கு உடன் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள camera இடது, வலது பக்கங்களிலும் 30 டிகிரிக்குள் உள்ளவர்களை மட்டும் துல்லியமாக scan செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இம் முறைமையானது அடுத்த வருடம் முதல் விற்பனைக்கு வருகின்றது.

செயல்படும் விதம் குறித்த கீழே உள்ள video பாருங்கள்

You might also like

Comments are closed.