25 பில்லியன் டவுன்லோட்கள்! கூகுள் ப்ளே புதிய சாதனை!

2,105

 2,610 total views

கூகுள் ப்ளே ஸ்டோரில் 2,500 கோடி முறை அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 25 சதவிகிதம் அப்ளிக்கேஷன்களுக்கு தள்ளுபடி வழங்கி கோலாகலமாக கொண்டாடுகிறது கூகுள்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுவரை கிட்டத்தட்ட 6 லட்சத்தி 5 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் இருப்பதாகவும், இந்த அப்ளிக்கேஷன்கள் 2,500 கோடி தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாகும் கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக, மிக பிரசித்தி பெற்ற ‘டாப்’ அப்ளிக்கேஷன்களுக்கு கூகுள் ப்ளே 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது.

கூகுள் ப்ளேயின் இந்த டவுன்லோட் சாதனையை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். 2010ம் ஆண்டு 100 கோடி டவுன்லோட்களை பெற்ற கூகுள் ப்ளே, 2011ம் ஆண்டு 300 கோடி டவுன்லோட்களை பெற்று முன்னேற்றத்தைகாட்டியது.

கடந்த ஆண்டு பாதியிலேயே கூகுள் ப்ளே 1000 கோடி டவுன்லோட்களை பெற்றது. 2012ம் ஆண்டு துவக்கத்திலேயே 1,500 கோடி டவுன்லோட்களை பெற்ற கூகுள் ப்ளே அப்ளிக்கேஷன்கள், இந்த
ஆண்டு முடிவதற்குள்ளாகவே டாப் கியர் போட்டு 2,500 கோடி டவுன்லோட்களை பெற்று சாதனை புரிகிறது.

இத்தகைய பெரிய சாதனையை கொண்டாட வேண்டியதும் அவசியம் தான். இதனால் மக்கள் மத்தியில் அதிகம் பேர் பெற்ற அப்ளிக்கேஷன்களுக்கும், அதிக டவுன்லோட்கள் பெற்ற அப்ளிக்கேஷன்களுக்கும் கூகுள் ப்ளே 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது.

 

சரியான சாதனையை, சரியான முறையில் கொண்டாடுகிறது கூகுள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த 2,500 கோடி டவுன்லோட்கள் இன்னும் இந்த ஆண்டு முடிவதற்குள் அதிகரிக்கும் என்று தான் தோன்றுகிறது.

You might also like

Comments are closed.