விண்வெளிக்கு பயணமாகும் பல்லி

674

 1,229 total views

மனிதன் விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றான்.  இப்போது அந்த வகையில் சோதனை செய்ய உள்ளது ஒரு பல்லியை.  இந்த முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் உயிரியல் மருத்துவத்திற்கான ரஷ்ய நிறுவனம் பல்லிகளை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும்.
பல்லிகளின் விண்வெளிப் பயணம் தொடர்பாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் விண்வெளிக்கு மனிதர்களை தெரிவு செய்து பயிற்சி அளித்து அனுப்புவது போன்றே பல்லிகளும் அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கு மிக வலிமையற்ற உடல்நிலை சரியில்லாத மற்றும் கோபம், ஆத்திரம், படபடப்பு போன்ற உணர்ச்சி அதிகம் உடைய பல்லிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றார்.
மேலும் வீட்டில் இருக்கும் பல்லிகளுக்கு சிறப்பு பயிற்சி அதிகம் தேவைப்படாது. எந்த வெப்பத்தையும் அவற்றால் தாங்கிக் கொள்ள முடியும். எடையற்ற சூழ்நிலை உருவாகும் போதும் புவிஈர்ப்பு விசை குறையும் போதும் இவை தரையிலோ, சுவற்றிலோ, கூரையிலோ ஊர்ந்து செல்லும் இயல்புடையது.
இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்வதால் மனிதர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கான உடல் நலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடந்த 1947ம் ஆண்டில் முதன் முறையாக ஈக்கள் முதன் முறையாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

You might also like

Comments are closed.