இமெயில் சேவையை நிறுத்துகிறது இன்டியா டைம்ஸ்

625

 1,274 total views

டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இன்டியாடைம்ஸ்.காம் இமெயில் சேவையை நடத்தி வந்தது. இந்த இமெயில் சேவைக்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவும் இருந்தது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 18, 2013 முதல் தனது இமெயில் சேவையை நிரந்தரமாக நிறுத்த இருப்பதாக டைம்ஸ் இன்டர்நெட் அறிவித்திருக்கிறது.

இதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நவம்பர் 19, 2012 முதல் இதன் இமெயில் சேவையில் புதிதாக இணையும் உறுப்பினர்களை இண்டியா டைம்ஸ் ஏற்கவில்லை. அதோடு புதிய இணைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 

அதோடு ஏற்கனவே இன்டியா டைம்சின் இமெயில் சேவையைப் பயன்படுத்தி வரும் உறுப்பினர்களுக்கும் இந்த தகவல் அதிகார்ப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி 18க்கு பின் அவர்கள் எந்த ஒரு இமெயிலையும் இன்டியா டைம்ஸ் மூலம் அனுப்ப முடியாது. அதுபோல் எந்த இமெயிலையும் பெறவும் முடியாது.

You might also like

Comments are closed.