மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு

0 49

மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு (GPRS) செயல்பாட்டில் இருப்பது அவசியம்.

  • டிக்கெட் முன்பதிவு செய்தல்
  • PNR நிலைமை அறிதல்.
  • பதிவு செய்த டிக்கெட்களை பார்க்கும் (Booked History) வசதி.
  • பதிவு செய்த டிக்கட்டை நீக்க (Cancel Ticket) என பல வசதிகளை மொபைல் மூலமே செய்து விடலாம்.
இது மட்டுமல்லாமல் மொபைல் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பொழுது நீங்கள் பதிவு செய்த டிக்கெட் விவரம், ரயில் எண், PNR எண் போன்ற விவரங்கள் உங்கள் மொபைளுக்கே வந்துவிடுவதால் டிக்கெட் பரிசோதகரிடம் இந்த செய்தியை காட்டினாலே போதும் டிக்கெட் printout எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.இதற்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய இணைய பகுதியை திறந்து உள்ளது. உங்கள் மொபைலில் https://www.irctc.co.in/mobile இந்த தளத்திற்கு சென்று டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறை என்பதால் அந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு பிறகு டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளவும்.

கணினியில் E-Ticket முன்பதிவு செய்வதை போலவே உங்களின் Credit/Debit Cards உபயோகித்து மொபைலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணமும் E-Ticket போலவே Slepper Class = Rs.10/- , குளிர் சாதன வசதிக்கு – Rs.20/- கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த புதிய வசதியின் மூலம் முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 1000 உறுப்பினர்கள் வீதம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரவேற்ப்பை பொருத்து இந்த எல்லை மாற்றி அமைக்கப்படலாம்.

Related Posts

You might also like

Leave A Reply