பேஸ்புக் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை

0 13

சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை முற்றாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்யப்பட்டதால் வழக்கை எதிர்நோக்கியுள்ள ஷஹின் தாடா என்ற பெண் இது குறித்த எதிர்வினைகளால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவரின் பதிவுக்கு, ஆதரவளிக்கும் வகையில் “லைக்” போட்ட மற்றொறு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

கைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் கண்டித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மாய்க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒரு தொழிலதிபரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts

You might also like

Leave A Reply