புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

69

 205 total views,  1 views today

பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பூமிக்கு 600 ஒளி வருட தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்குச் சமமானது.

தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழத் தேவையான சூழ்நிலை இந்தக் கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில் உயிரினங்கள் வசிக்கக் கூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண்வெளியை ஆராயத் தொடங்கியது.        இந்தத் தொலைநோக்கி மூலமே தற்போது இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You might also like

Comments are closed.