பில்கேட்ஸ் vs ஸ்டீவ் ஜாப்ஸ்

623

 1,491 total views

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள்.

இதில் ஆச்சரியமான விஷயம் இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்.  ஸ்டீவ் ஜாப்ஸ் மில்லினியர் நிலையை 1980 லேயே அடைந்து விட்டார். ஆனால் பில்கேட்ஸ் இந்த நிலையை 1986-ல் தான் அடைய முடிந்தது. ஆனால் அடுத்த பில்லினியர் தகுதியை 1987 லேயே பில்கேட்ஸ் பெற்று விட்டார். இந்த தகுதியை ஸ்டீவ் ஜாப்ஸ் பெற சுமார் 15 வருடங்கள் (1995) ஆகியது. மேலும் சில சுவாரஸ்யமான தவல்களை பெற கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

பிரபல சோனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போகிறதாம். இவர்கள் இருவருக்கும் கணினி உலகம் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

You might also like

Comments are closed.