தனி மனித ஒழுக்கம் – இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை
2,957 total views

தனி மனித ஒழுக்கங்கள்_சமுதாய ஒழுக்கங்கள் என்ற அடிப்படையிலேயே நமது இந்திய நாட்டிலேயும் உலக வரலாறுகளிலும் மதங்கள் உருவாக்கம் பெற்றன. அன்பை வலியுருத்த புத்த மதம் . குற்றங்களை மன்னித்து மறந்து திருந்தி வாழ கிருத்துவ மதம் .குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் உள்ளடக்கிய இஸ்லாம் மதம் என பல மதங்களும் தனி மனித சமுதாய ஒழுக்கங்களை வலியுருத்தி வந்திருக்கின்ரன .ஆனால் நாமாக பார்த்து திருந்தாவிட்டால் சமூக மாற்றம் வராது என்பது மட்டும் உண்மை.
‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”என்ற கவிஞரின் வைரவரிகள் தான் நினைவுக்கு வரும்.
இருப்பினும் கீழ்கண்ட சட்டங்கள் இயற்றினால் தான் தனி மனித ஒழுக்கம் வளரும் குற்றங்கள் குறையும்.
*தனிமனித ஒழுக்ககேட்டிற்கு அடித்தளம் இடுகின்ற அனைத்து போதை வஸ்துக்களும் உடனடியாக தடை செய்யப்படவேண்டும்.
*உடல்நலத்திற்கும் உலக சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற தேவையற்ற, தரமற்ற பொருள்கள் தயாரிப்பதற்க்கும் விற்பதற்கும் தடைவிதிக்கவேண்டும்.
*சமுக ஒழுக்கம் என்பது தனிமனித ஒழுக்கத்தினாலேயே ஏற்பட முடியும்.எனவே,தனிமனித ஒழுக்க நெறிமுறைகளை சட்ட பூர்வமானதாக ஆக்கினாலேயே சமுக குற்றங்கள் எற்படாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
*மனிதவுரிமைகள் என்பதன் பேரில் தனிமனித ஒழுக்ககேடுகளை தொடர்ந்து அனுமதித்தால் தனிமனித அமைதியும் சமுகஅமைதியும் கிட்டாமலேயே போய்விடும்.
Comments are closed.