செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் விஞ்ஞானிகள் தகவல்!!
861 total views
மனிதன் பூமியைத் தவிர வேறு எங்கு வாழ முடியும் என தன் தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளான். இந்தத் தேடலில் ஒன்று தான் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது. இது குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளிக் கழகம் E.S.A Express விண்வெளி ஓடத்தை அனுப்பியுள்ளது. அதன் சக்தி வாய்ந்த camera செவ்வாய் கிரகத்தின் ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் வடகிழக்கில் மலைகளில் ஐஸ் கட்டிகள் வளைவுகளாக உறைந்து புதைந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இவை பனிப் பாறைகளாகவும் இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவுகிறது.
Comments are closed.