கைதிகளை கண்காணிக்க ரோபோ
945 total views
கைதிகளை கண்காணிக்க விஞ்ஞானிகள் உதவியுடன் ரோபோக்கள் ஒன்றை தென்கொரியாவின் பொஹாங் சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. 4 சக்கரங்களுடன் இந்த வகை ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன cameraக்கள், sensorகள் பொருத்தப்பட்டுள்ளது. கைதிகளின் வழக்கமான நடவடிக்கைகள் மென்பொருள் உதவியுடன் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மீறி எந்தச் செயலிலாவது கைதிகள் ஈடுபட்டால் ரோபோ உடனே அலாரம் அடிக்கும். இதன்மூலம் கைதிகள் தப்பிப்பது, தற்கொலை முயற்சி, மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் குறையும் என்கின்றனர் அதிகாரிகள்.
Comments are closed.