கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன் இப்போது உங்கள் கையெழுத்து மற்றும் வாய்ஸ் – ஐ மொழி மாற்றம் செய்கிறது

291

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்த புதிய ட்ரேஸிலேட் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொழிபெயர்ப்புக்கு அலுவலகங்களில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் ட்டேன்ஸிலேட்.

அதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் புதிய கூகுள் ட்ரேன்ஸிலேட்
அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.

கூகுள் ட்ரேன்ஸிலேட்ர் அப்லிகேஷனை தொடர்ந்து பல வசதிகளை நமக்கு அளித்துள்ளது. தற்போது வாய்ஸ் மற்றும் கையெழுத்துக்களை மொழி மாற்றம் செய்யும் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் வழங்கியுள்ளது .
இந்த புதிய அப்ளிக்கேஷன் மூலம் மொத்தமாக 64 மொழிகளை மொழிபெயர்க்க முடியும். இதில் 40 மொழிகளில் குரல் பதிவுகளை (வாய்ஸ் இன்புட்) புரிந்து கொள்ளும் வகையில் இந்த அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமாக 14 மொழிகளில் செய்யப்படும் குரல் பதிவுகளை புரிந்து கொண்டு, அதற்கு  பதிலையும் அளிக்கும் இந்த புதிய ஆன்ட்ராய்டு கூகுள் ட்ரேன்ஸிலேட் அப்ளிக்கேஷன்.

You might also like

Comments are closed.