உலகின் மிகப் பெரிய online shopping amazon.com இந்தியாவில்

42

உலகின் மிகப் பெரிய online shopping இணையதளமான amazon.com இந்தியாவில் இன்று முதல் junglee.com என்ற பெயரில் அறிமுகம் ஆகிறது. http://www.junglee.com/

junglee.com-ல் சுமார் 1 கோடியே 20 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 14,000 இந்திய மற்றும் பன்னாட்டு பிராண்டுகள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலைகளை ஒப்பு நோக்கி பரிசீலிப்பதற்கான வசதிகளையும் ஜங்லீ செய்துள்ளது. ஆனால் கொள்முதல் மூன்றாம் நபர் சில்லறை விற்பனையாளர்கள் network மூலமே செய்ய முடியும்.

இனிமேல் ஷூக்களையும், கணினி தொடர்பான உபகரணங்களையும், துணிமணிகளை ஃபேப் இந்தியாவிடமிருந்தும், handbags மற்றும் பல பொருட்களையும் இனி இந்தியர்கள் நேரடியாக வாங்கலாம்.

கிண்டில் போன்ற சில உருப்படிகளை அமேசான்.காம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதனை அனுப்பும் செலவு பொருளின் விலையை விடவும் அதிகமாகிறது.

இந்தியாவில் இணையதள பயனாளர்கள் குறைவாக இருந்தாலும் online வர்த்தகம் ஒரு வளர்ந்து வரும் வர்த்தகமாகும்.

அமேசான் இந்தியாவுக்கு வருகிறது என்பதால் ஏற்கனவே online  வர்த்த்கத்தில் இருந்து வரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

You might also like

Comments are closed.