இன்போசிஸ் அலுவலகங்கள் பசுமையாகப் போகின்றன “Go Green “
2,101 total views
தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Infosys தற்போது அதன் அலுவலக கட்டிடங்களை இயற்கைக்கு பாதிப்பிலாத வகையில் அமைத்துள்ளது. Infosys நிறுவனம் தெரிவிக்கையில், அரசு நிர்ணயம் செய்யும் தரத்தினை காட்டிலும் இந்த கட்டிடங்கள் 25 சதவிகிதம் கூடுதலான தரத்தில் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்நிறுவனம் தெரிவிக்கையில் மைசூர், ஹைதராபாத், புனே மற்றும் மங்களூர்-ல் கட்டியுள்ள கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் 300 million liters தண்ணீர் சேமிக்கப்படும் என்றும், 20 சதவிகித அளவுக்கு 2012-ம் ஆண்டுக்குள் இயற்கை மின்சாரத்தை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எப்படியோ நிலத்தடி நீர், காற்று போன்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொரு நபரின் பொறுப்பு. எல்லா நிறுவனங்களும், மனிதர்களும் இதுபோன்று முயன்றால், இயற்கை பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் நன்மை உண்டாகும். இது இயற்கை ஆர்வலர்களின் கருத்தும் எனது கருத்தும் ஆகும்.
Comments are closed.