அமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro

202

 678 total views

விப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செய்யவுள்ளது என்றும் இதனால் விப்ரோ இன்னும் அதிகமாக லாபம் ஈட்டும் என்று தெரிவித்தார்.

இன்றைய தகவல் தொழில்நுட்பத்துறையில் நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. முன்னணி நிறுவனங்கள்    TCS, Infosys கூட ஐரோப்பாவில் சில நிறுவனங்களை கையகபடுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.  விப்ரோ இத்தகைய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டுமானால் தனது பலத்தை அதிகமாக்குவது அவசியமாகிறது.

விப்ரோவின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் 78 சதவிகித விப்ரோ பங்குகள் உள்ளன. ஆகவே அவரது மகன், Rishad, அடுத்த தலைவர் பதவிக்கு வரலாம். ஆனால் Azim Premji தெரிவிக்கையில் அடுத்த 24 மாதங்களுக்கு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெரும் எண்ணம் இல்லை என்றார்.

தனது தந்தையின் மரணத்துக்கு பின் 1966-ல் தனது 21 வயதில் அவரது தந்தை தொழிலை ஏற்றார். அப்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 2 மில்லியன் டாலர்கள். விப்ரோவின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள்.

You might also like

Comments are closed.