ஒவ்வொரு சாணிக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும்.

1,636

 2,198 total views

ஒவ்வொரு இந்திய அரசியல்வாதிகளுக்கும் சந்தோசம் தருவது, எந்த நாடு நாம் மீது சாணி அடித்தாலும்.. அட இது மாட்ட்டுச்சாணியா? இல்லை நாய் சாணியா என சுவைத்துப் பார்த்து சொல்லும் திறன் தான். நமது அப்துல் கலாம் அவர்கள் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட போது இவர்களின் கொந்தளிப்பு 40% என்றால்,

ஒரு ஹிந்தி நடிகை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமானப்பட்ட போது ஏற்பட்டது 70%.

சனியா மிர்சா குட்டை கீழாடை போடுவது பற்றிய விவாதம் 75%.

இந்தியர் ஆஸ்திரேலியவில் அடிபட்டு சாகும் போது 50%,

இலங்கையில் நூற்றாண்டு காலமாக வாழும் பிழையற்ற தமிழ் மொழி பேசும் இந்திய மக்கள் சாகும் போதும் வந்த துடிப்பு அமோகம். 20%

இலங்கை இராணுவ உடை கொண்ட மூளை வளர்ச்சி குறைந்த சிங்கள மொழி பேசும் புத்தரை வணங்கும் சாதுக்களால் புத்தர் போன்றே படகுகளில் நிர்வானப்படுத்தப்படும் போது 5%

சீக்கியனுக்கு பாதிப்பு என்றால், நமது பிரதமர் சீக்கிய உடையை அறிமுகம் செய்ய மேற்கத்திய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று, அய்யா சாமி, இது சீக்கிய உடை, இஸ்லாமிய உடை அல்ல என்று ஒரு பேசன் ஸோ செய்கிறார்.

இப்போது அமெரிக்க சாணியின் சுவை மறந்து விட்டது நம் அரசியல் வித்தகர்களுக்கு.

நான் யார் மீதும் கண்மூடித்தனமான வெறுப்பு காட்டுவதில்லை, ஒபமா மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள், தங்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய, இந்திய நிறுவனங்களுக்கு தடை செய்கின்றனர், இந்தியர் எவரேனும் அமெரிக்கா சென்றால், மிகுந்த சோதனை செய்தே அனுப்புகின்றனர். விசா கட்டணம் 200% உயர்த்தபபட்டுள்ளது. இந்திய நிறுவனங்களின் மீது அதிக வரி விதிப்பு. அட, இது ஒரு உண்மையான அக்கறை கொண்ட அதிபரின் கடமை. அவர் தன் நாட்டைக் காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறார்.

ஆனால், நமது அரசியல் மேதைகள், ஒபமா மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 2800-3000 பேர் இங்கே இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய நாள் ஒன்றுக்கு (ரூபாய் 900 கோடி) (நாளிதழ் செய்தி). சிலவு செய்கிறது.

மும்பை தாஜ் ஹோட்டலில் அவரின் பரிவாரங்கள் தங்க கோடிகளில் சிலவு.

அதே மும்பையில் பிச்சை எடுத்துக்கொண்டும், ஒரு வேலை உணவிற்கு நாள் முழுதும் உழைத்துக்கொண்டும், உடம்பை கடை பரப்ப கடத்தப்பட்டு வந்த பெண்களும், கூலித் தொழிலாளிகளும் தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த 900*4 = ரூபாய் 3600 கோடியில் பாதி தொகையை வைத்து ஏதேனும் செய்யலாம்.

இன்னொரு போபால் விஷ வாயு சம்பவம் நடந்தால் அதற்கு எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் பொறுப்பு அல்ல என் இன்னொருமுறை சொல்லிவிட்டுச் செல்ல வரும் ஒபமா அவர்களே வருக வருக.

எப்போதும், இந்தியாவில் சாணியின் சுவை அறியும் குழு நாடாளுமன்ற முன் வரிசையில் அமர்ந்து இருக்கும். சுயமரியாதை கொண்ட இளம் உறுப்பினர்கள் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து உங்கள் உரையை உற்று கவனித்துக்கொண்டு இருப்பர்.

You might also like
6 Comments
  1. Karthi Keyan says

    நன்றி நண்பரே 🙂

Comments are closed.