பத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் !!

553

 812 total views

ராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது  அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள்  செய்யபட்டிருந்தது. ஆனால்  பல கோடிகணக்கில் செலவிட்டு விண்ணில்  ஏவப்படும் ராக்கெட்டுகளை  மறுமுறை பயன்படுத்தும் முயற்சியில்  தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-X சாதனை படைத்துள்ளது. சாதரணமாக ராக்கெட்டுகள் விண்வெளி பயணத்தை முடித்த பின்னர்   ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தவியலாது. ஆனால் தற்போது அந்த எண்ணத்தினை முறியடித்து ஸ்பேஸ்-X நிறுவனம் தற்போது ராக்கெட்டினை  தரையில் பாதுகாப்பான முறையில் செங்குத்தாக தரையிறக்கும் நோக்கில்  சாதித்து காட்டியுள்ளது.

இதுவரை அனைவரும் நினைத்திருந்த ஒரு எண்ணத்தை  மாற்றி  கழிவாக மட்டுமே போய்கொண்டிருந்த ஒரு பொருளை மாற்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளது ஆச்சரியமே! ஏவுதளத்திலிருந்து மிகவும் கவனமாக புறப்பட்ட இந்த பல்கன் -9 இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு ராக்கெட்டின் முன் பகுதி அதன் அடுத்த பகுதியிலிருந்து பிரிந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. அதன் பின் ராக்கெட் நேர்குத்தாக தரையிறங்கியது.இதனால் விண்கலத்தினை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாமல்  புதிதாக வேறு ஒரு விண்கலத்தை  உருவாக்க அதிகமாக செலவு செய்யத் தேவையில்லை . பணம் மிச்சமாவதோடு    மட்டுமல்லாமல்  மனித உழைப்புகளும் சேமிக்கபடுகின்றன.

images

செங்குத்தாக களமிறங்கிய கலங்களில்  இது முதலாவதல்ல இதற்கு முன்  ப்ளூஆர்ஜின்  கலம்  வெற்றிகரமாக மேற்கு டெக்சாஸில்  களமிறங்கியது என்றாலும் அது  மிகவும்  சிறியது  என்பதோடு மட்டுமல்லாமல் அது விண்வெளிச் சுற்று வட்ட பாதை வரை தொட்டுவரவில்லை என்பது  ஒரு குறையே !  ப்ளூஆர்ஜின் விண்கலம் அமேசானின்  இணைய உரிமையாளரான ஜெட் பிராசசின்  அனுசரணையால் தொடங்கப்பட்டது. மேலும் தற்போது விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பல்கன் -9   மற்றொரு இணையதள இலட்சாதிபதியான  ஹெலன் மாஸ்க்கின் ஆதரவுடன் அனுப்பப்பட்டது. இவர்களுக்கிடையிலான இந்த போட்டி விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகின்றன.

You might also like

Comments are closed.