சோனிக்கு வந்த சோகம்
508 total views
சோனி என்றால் யார் என்று என்ன வேண்டாம் இது ஜப்பானிய கம்பெனியான சோனி நிறுவனமே. வெறும் 7,70, 00, 000 மக்களின் ஆவணங்களை மட்டுமே எந்த களவாணிப் பயலிடமோ கோட்டை விட்டு விட்டது. ஏப்ரல் 20 ம் தேதி முதல் தன்னுடைய Playstation சேவையை நிறுத்தி வைத்துள்ள சோனி நிறுவனம் நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வாரத்தில் தன்னுடைய Play Station சேவைகளை திரும்பவும் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த திருட்டில் இடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கும் கம்பெனிகளில் ஒன்றான சோனி நிறுவனத்துக்கே இந்த நிலைமை என்று என்னும் பொழுது வருத்தமாக இல்லை மாறாக பயமாக உள்ளது. காரணம் இந்த திருட்டில் ஈடுபட்ட HACKERS என்று சொல்லக் கூடிய களவாணிகள் திருடி இருப்பது எதோ சோப்பு சீப்பு இல்லை மக்களின் சொந்த விவரங்கள் மற்றும் அவர்களுடைய CREDIT CARD போன்ற முக்கியமானவற்றை திருடியுள்ளார்கள்.
எப்போடியோ எத்தனுக்கு எத்தன் வையகத்தில் உண்டு என்பதை படு சுவாரசியமாக காட்டி விட்டார்கள். விளையாட்டு வினையாகும் என்பார்கள் , சரிதான் இங்கு சோனியின் விளையாட்டு சாதனம் அதனுடைய 7,70, 00, 000 மக்களின் வாழ்க்கையில் விளையாட்டு காட்டி விட்டது.
தீராத விளையாட்டுப் பிள்ளை 🙂
Comments are closed.