ஆஸ்துமாவைக் கண்டறியும் ஸ்மார்ட் போன்கள் :

38

ஆஸ்துமா போன்ற சுவாச நோயை ஸ்மார்ட் போன்களில் காண்பது என்பது உண்மையாகவே அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுவதாகத்தான் உள்ளது . ஆஸ்துமாவைக் கண்டறியும் இந்த விங் சாதனத்தை ஸ்மார்ட் போன்களில் இணைத்து ஆஸ்துமா நோயினை அதன்  அறிகுறிகளை கொண்டு முன்கூட்டியே அறிந்து தடுக்கலாம் . ஆஸ்துமா வரும் அறிகுறியை முன்கூட்டியே அறிந்தால் குணமாக்க கூடியே ஒன்றே.

xftpiqs2bny9citglbe9

விங் என்பது கையாளச் சிறந்ததாக உள்ளது . இதற்கு பேட்டரிகளும் என்று ஏதும் இல்லாததால் சார்ஜ் ஏற்றும் அவசியமுமில்லை .இதனை ஒரு ஹேட் செட்டை போல் சொருகி உங்கள் வேலைகளை எளிதில் செய்யலாம் . இதை சுத்தம் செய்வதும் சுலபமே…!

இந்த சாதனத்தின் விங் சென்சாரின் உதவியின் மூலம் நாம் ஒரு நொடியில் மூச்சுக்காற்றை ஊதும் போது ஊதும் காற்றின் அளவிற்கேற்ப ஒரு வரைபடத்தில் நுரையீரல் எப்படி இயங்குகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம் . இந்த விங் சாதனத்தை போனில் இணைப்பதன் மூலம் திரையில் ஆஸ்துமா பற்றிய தகவல்களையும் அதன் விளைவுகளையும் காட்டப்படும்.

விங் மூலம் மனிதனின் இரத்தத்தில் உள்ள ஒட்டுண்ணிகளை பார்க்க முடியும் அதனால் மனிதனின் உயிரை ஆஸ்துமா நோயிலிருந்து பாதிக்கப்படுவதைத் தவிர்த்து உயிரைக் காப்பாற்ற முடியும் . விங் தற்போது FDA ஒப்புதலுக்காக கடந்து கொண்டிருக்கிறது என்பது மற்றுமொரு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியே .இது ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற நுரையீரல் குறைபாடு தொடர்பான நோய்களையும் கண்டறியும் ஒரு குறைபாடு தொடர்பான நோய்களையும் கண்டறிய ஒரு சாதனாமாகவும் உள்ளது. இது தற்போது $90 மற்றும் $100 டாலருக்கு விற்று தீர்ந்து விட்டது .இந்த சாதனத்திற்கு மேலும் ஆதரவு கூடுமென்றால் அடுத்த ஆகஸ்ட்டில் இந்த சாதனத்தைப் பெறலாம் .

k2kbplpwcsohnpefeiv3விங்ஸ் சாதனத்தின் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் ஒலிம்பிக் தடகள வீரர்கள் (நீந்துபவர்கள் , ஓட்ட பந்தய வீர்கள் , மிதிவண்டி பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் இசை பயிற்சி மேற்கொள்ளுபவர்களும் பாடகர்களும்) பயன்படுத்தலாம்.அதோடு இதை கையாளுவதற்கோ அல்லது அதன் அளவீடுகள் மிகவும் கஷ்டப்படக்கூடிய அளவிற்கான கருவிகளோ இல்லை . இதை அன்றாடம் பயன்படுத்துகையில் உங்களால் நோயின் அறிகுறியை வெகுவிரைவில் கண்டறிந்து நோயின் தாக்கத்தை முதிரவிடாமல் தடுக்கலாம் . மேலும் சிகிச்சைக்கு உங்கள் உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறதா போன்றவற்றையும் கண்டறியலாம்.

இந்த பயன்பாடு உங்களின் மருத்துவம் சம்ந்தப்பட்ட அனைத்து தரவுகளையும் உங்களது மருத்துவருக்கு அனுப்புவதன் மூலம் உங்கள் உடல்நிலையை கண்காணிப்பது என்பது மருத்துவருக்கு சுலபமான ஒன்றாகிவிடும் .இதை எதிர்கொள்வது என்பது மிகவும் சுலபமே !
தற்போது இந்த பயன்பாடு ios போன்களில் மட்டுமே உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆன்ட்ராய்டு பதிப்புகளிலும் கொண்டு வரும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

You might also like