முகநூலில் Sefie (சுயமி) அடிக்கடி போடுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

514

 1,691 total views

சமுக வலைதளங்களில் இன்று  அதிகமாக  பதியப்படுவது செல்ஃபி வகை படங்கள் தான். அலைபேசி  வாங்கும் போதே செல்ஃபி  எடுக்க உகந்ததா  என்று  சோதித்து பார்த்துவாங்கும் மனநிலையில் தான் நாமும் இருக்கிறோம். அதே போல செல்ஃபிக்கு முக்கியம் கொடுத்து முன் பக்க கேமராவின் தரம் உயர்த்தி  தயாரித்து  அதையே விளம்பரப்படுத்தியும் வருகின்றன நிறுவனங்கள். ஆனால்  செல்ஃபி  செல பக்கவிளைவுகளையும் உருவாக்கி இருக்கிறது.

 அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.

 அதன்படி,  ஒன்று நார்சிஸ  நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருக்கின்றனர். அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.

selfie1

 இதனை அடுத்து எதற்காக செல்ஃபி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், தங்களது ஆளுமையை வெளிப்படுத்துவதில் தோற்றுவிடுவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

 தொழில்முனைவோரான க்ராவ்ஃபோர்ட் என்பவர் இது குறித்து கூறும்போது, “உங்களுக்கு வேலை வழங்குபவர் பல கோணங்களில் உங்களை ஆய்வு செய்வார். செல்ஃபிக்களை அதிகம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புபவரை, ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக பார்க்கப்படுவார்.

Selfie-obsession-may-cost-you-your-job-jpg

 செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்” என்றார்.

 மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து அப்டேட் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

அதேபோல சமுக  ஊடகங்களிலும் வேலை தேடிவருபவர்களின் பற்றிய  தகவல்களை நிறுவனங்கள் சேகரிப்பதாக சிலமாதங்களுக்கு முன்  ஒரு  ஆய்வு  வத்துள்ளது.

tumblr_inline_mtlf9t36eh1rbe7dr

சமுக வலைதளங்களான  ஃபேஸ்புக் டிவிட்டர் சாதரண மனிதர்கள்  தங்கள் கருத்துகளை,  படைப்புகளை வெளியிடும் இடங்களாக  இருக்கிறது. அதன் பயனாளர்கள்  தங்கள் அறிந்தவற்றை, தங்களின் படைப்புகளை,  சமுகம் அரசியல்  சார்ந்த  தங்கள் அபிப்ராயங்களை  நண்பர்கள்  வட்டத்தில்  பகிர்ந்து  கொள்கின்றனர்.  சிலர்  தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள்., நண்பர்களோடு  களித்த  போழுதுகளில் எடுக்க பட்ட படங்களையும், பணிபுரியும் இடத்தில்  நடக்கும் சில செய்திகளையும்  பகிர்ந்து  கொள்கின்றனர்.

 இது  அவர்களின் வேலை வாய்ப்பு பெருவதில் பிரச்சனையாக   இப்போழுது வருகிறது. பல்வேறு நிறுவனங்கள்   சமுக வலைதளங்களை  வேலைத்தேடி வருபவர்களின்  பின்னனி தெரிந்துகொள்ள  பயன் படுத்துகின்றன. வேலைத்தேடி  வருபவர்கள் பற்றிய தனிபட்ட தவறான தகவல்களை திரட்ட கூடிய ஒரு  இடமாகவே சமுக வலைதளங்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

selfie-obsesions

கரியர் பில்டர்  இந்தியா ( CareerBuilder India)    எடுத்த    கருத்து கணிப்பில் 59% நிறுவனங்கள் இந்த முறையை பயன் படுத்தி  கொண்டு  இருப்பதாகவும் 33% நிறுவனங்கள் வரும்காலங்களில்  பயன்படுத்த போவதாகவும் தெரிவித்து  இருகின்றனர். இந்த  கருத்துகணிப்பு 1200 பெரு நிறுவனங்களிடம் எடுக்கபட்டது.

சமுக வலைதளங்களில் பதியபடும்  தகவல்களில் முன்னர் பணிபுரிந்த நிறுவனங்கள்  பற்றிய தகவல்கள்,  நிறுவனத்தின் ரகசிய தகவல்கள்.  மேல்   அதிகாரிகள்  பற்றிய தகவல்கள், பயன் படுத்துகிற  மொழி
வடிவம் போன்றவையின்  மூலமாக அவர்களின் குணங்களை கணிப்பதற்க்கு பயன்படுத்துகின்றனர்.

You might also like

Comments are closed.