ராசா ஆ! கொடநாட்டு ரோசா !!

911

 2,244 total views

it-minister-araja

ஆ. ராசா (ஆ. ராஜா, பிறப்பு: 10 மே 1963) 15 வது இந்திய மக்களவையின்உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். தற்பொழுது 15 வது மக்களவைஅமைச்சரவையில் ஆய அமைச்சராக தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சராக பொறுப்பு வகிக்கின்றார். மக்களவைக்கு நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.
நாடெங்கும் ஆ ராசா; ராசா ஆ என்றே பேத்திக்கொண்டிருக்கிறது. ஆசியஜோதி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளில் ; குழந்தைகள் தினமான நவம்பர்- 14  நேருவுக்கு  ரோசா பிடிக்குமே என்பதால் ஆ ராசாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் கறுப்பு ரோசவுக்கு ஒரு பின்னடைவு. கொடநாட்டு ரோசாவுக்கு நினைத்ததை நடத்தியே முடிப்பவர் நான் நான் என்று சொல்லுமளவு ஏக மகிழ்வு.

தலைமைக் கணக்கு அதிகாரி சொன்னாலும்; துறைச் செயலர் இவரின் கீழ் பணிபுரிந்தவர் மாத்த்தூர் சொன்னாலும்; உச்சநீதி மன்றமே சொன்னாலும்; பணியமாட்டோம் என வீம்புக்கு பேசிக்கொண்டிருந்த  ராசாவும்; கலைஞரும் தடாலடியாக பணிந்து போய் விட்டதைப் பார்த்தால் தேர்தல்பிணி அதிகம் ஆட்டிக் கொண்டிருப்பதை நம்மால்  புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயா டி.வியும்; இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிம் சொன்ன : தென்னகச் சிற்றரசர் அழகிரி அண்ணனுக்கும் ராசாவுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு  டில்லியில் நடந்திருக்கும்போல்தான் நமக்கே சந்தேகம் எழுகிறது.
Jayalalitha
கொடநாட்டு ராணிக்கும் ஊட்டி எம்.பி. ராசாவுக்கும் எப்போதிருந்து இந்த பகைமை என்று  சற்று ஊன்றிப்பார்த்தால்தான் கொடநாட்டுப் பிரச்சினையே இதற்கு அடித்தளம் என்று புரியும்: அங்கு அவரது எஸ்டேட் இடத்தில் சாலை கேட்டு போராட்டம்; அத்துமீறல்கள்  நடந்துள்ளதாக அடிக்கடி பிரச்சினைகள் உள்ளூர் அமைப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, அதற்கு அம்மாவின்
வழக்கறிஞர்கூட்டம் எல்லாம் மறித்து காப்பாற்றியதை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.
இவர்களுக்கு எல்லாம் சுயநலம் காக்கத்தான் கட்சியே தவிர மக்கள்நலம் என்பதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்பது இவர்களின் நடவடிக்கையெல்லாம் பார்த்தால் நன்கு விளங்கும்.
நமது கலைஞர் அய்யாவை எடுத்துக் கொண்டால்: தயாநிதி மாறனை நன்றாக பணிபுரிந்தவரை குடும்ப ஆளுமைத்தன்மைக்க்காக வெளியேற்றிவிட்டு இந்த ஆ. ராசாவை அந்த இடத்திற்கு பூர்த்தி செய்ய  வைத்தார்.  கனிமொழி இராஜ்ய சபா எம்.பிக்கும் இந்த ராசா அவர்கட்கும் நெருங்கிய உறவு என்று இவர்களைப் பிடிக்காத மாற்றுக் கட்சிக்காரர்கள் வம்பு பேசி வருவது சற்று நெருடல் தரும் விஷியம்தான்.ஏன் எனில் டி.ஆர்.பாலு; செ;குப்புசாமி; போன்ற மூத்த  தலைவர்க்கெல்லாம் பெப்பே என்றுவிட்டு விட்டு ராசாவுக்கு முக்ய மந்திரி பதவியை அளித்திருப்பது யாரையுமே அப்படி நினைக்க வைக்கும்தான், அடுத்து இந்த இலாகா மந்திரியாக கனிமொழியாகக் கூட இருக்காலாம்.
மன்மோகன் சிங்க்; சோனியா; வாஜ்பேயி போன்றோர் நல்லவராகக்கூட இருக்கலாம். ஆனால் இவர்களால் எல்லாம் எந்த ஊழலையும் கருவறுக்க முடியவில்லை என்பதற்கு  இப்போது நடந்து வரும் : காமன்வெல்த் விளையாட்டு ஊழல்; கார்கில்போர் தியாகிகளுக்கு என்று கட்டிய வீட்டுத்தொகுதி  ஊழல் அதிலும் தற்போது  பதவிஏற்றுள்ள  பிருத்வி சவானுக்கும் தொடர்பிருக்கிறது என்ற  செய்திகள்; இப்போது 2 G அலைக்கற்றை ஊழலில் இலட்சக் கணக்கான கோடிகளில் நஷ்டம் நாட்டுக்கு இலாபம் யார் பாக்கெட்டுக்கு?
இதை எல்லாம் பாராளுமன்றத்தில் பிரச்சினைகளைப் பேசுவதற்கே காசு வாங்கி வெளிச்சமாகி பங்காரு இலட்சுமணன்  – பெயர் மறந்துவிட்டது; பி.ஜெ.பியில் ஒருமுறை தலைவராக இருந்தவர் தெஹல்கா பிரச்சினை, இராமர் கோயில் பிரச்சினை;மசூதி இடிப்பு; போன்ற குற்றங்களை எல்லாம் தோளில் வைத்துள்ள பி.ஜே.பி; போன்ற கட்சிகளும்; அம்மா தனக்கு யாருமே வாரிசு இல்லாத அம்மா தனக்கு வளர்ப்பு என்றவர்க்கும்; உச்ச நீதி மன்றம் என்ன சொன்னாலும் என்னை  ஒன்றும் செய்ய முடியாது; என்று வன்முறையும்; பணம்  இரண்டுமே வாழ்வின் வழியாக திராவக அரசியல் நடத்தி  தன்னைத் தவிர யாருமே மேடையில் அமரக்க்கூடாது என்று சோனியா; வாஜ்பாயி போன்றோர்களை எல்லாம் அவமதித்தவரும் கேட்கிறார்கள் என்பதுதான் சற்று வேடிக்கையான விஷியம்.
அரசியல் போரில் யாரும் நண்பரும் இல்லை; யாரும் நிரந்தரப் பகையும் இல்லை இந்த ராஜதந்திரத்தில் அம்மா ஜெ வும்; பி.ஜே.பியும் அடிக்கடி  தாம் செய்ததை; செய்வதை மறந்து போர்க் கொடி தூக்குவதே வாடிக்கை.
கலைஞர்; மன்மோகன் சிங்; சோனியா போன்றோர் தவறுகளோ சரியோ மாற்றிகொள்ளத் தயாராயிருக்கிறார்கள் – ஏதாவது காரணம் பற்றி. ஆனால் இந்த பி.ஜே.பியும்; அம்மாவும் எதற்க்காகவும் எதையும் மாற்றிகொள்ளாதவர் என்பதை மசூதி இடிப்பு; மற்றும் திராவகவீச்சு; பல தொகுதிகளிலும் தானே  வேட்பாளராக நிற்பது; தனது கையெழுத்தை தானே இல்லை என்பது;  நம்பிக்கைத் துரோகம் செய்வது; நீதிபதி; கவர்னர்களை விலைக்கு வாங்குவது போன்ற கடைசித் துருவம் வரை செல்பவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
இவர்கள் எல்லாம் கட்சி பேதமில்லாமல் தங்களை; தங்கள் கட்சியும்; தங்களது பலமும் மேல் வர வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள். மத்தியிலும்; மாநிலத்திலும் தனது குடும்பம் ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றையும் கைக் கொள்ளவேண்டும்  எனும் கலைஞர் தாத்தா இது போல் எத்தனையோ சுழல்களை எல்லாம் கண்டு மீண்டு வருபவர் இதெல்லாம் தூசு இவருக்கு. சொல்லமுடியாது கனிமொழி அம்மாவையே கூட மத்திய மந்திரியாக எதிர்பார்க்கலாம்.
ஏன் எனில்: மாநிலத் தேர்தல் வேறு நெருங்குகிறதல்லவா?
தமிழர்களே; தமிழர்களே நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும்  நான் கட்டுமரமாகத் தான் மிதப்பேன்;  அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்துவிட மாட்டேன்; என்பவர்க்கு இதெல்லாம் ஒரு விளையாட்டே. இன்னும் தேர்தலுக்குள் என்ன என்ன விளையாட்டுகள் எல்லாம் அரங்கேறப்போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like

Comments are closed.