ரிங்கோ பயன்பாட்டின் உதவியுடன் இனி இந்தியாவில் எங்கிருந்து பேசினாலும் ஒரு அழைப்பிற்கு 19 பைசா மட்டுமே!

205

 846 total views

சில மாதங்களுக்கு முன்பு   ரிங்கோ வெளியீட்ட தகவலின்படி   உலகளாவிய சர்வதேச அழைப்புகளை    மலிவான விலையில் பேசும்   அம்சத்தை வெளியிட்டிருந்தது. தற்போது  இன்றிலிருந்து  தொடங்கி இந்தியாவில் எந்த மூளைக்கு பேசினாலும் ஒரு அழைப்பிற்கு 19 பைசா மட்டுமே  என்ற  மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தந்துள்ளனர்.  ரிங்கோவின் மூலம் பயனர்கள்  ஒரு நிமிடத்திற்கு 19 பைசா வினை மட்டுமே கொண்டு   இந்தியாவில் யாருடனும் வேண்டுமானாலும்  பேசலாம் . மொபைல் சாதனம்  அல்லது லேன் லைன்   போன்ற எந்த சாதனத்தில்  பேசினாலும் ஒரே கட்டணம் தான்  வசூலிக்கபடுகிறது.

49934963.cms

இந்நிறுவனம்   நிமிடத்திற்கு 19 பைசா என்ற  திட்டத்தை  நிர்ணயித்துள்ளது ,சாதாரன அழைப்புகளை விட 90சதவிகிதம் குறைவாகவும் மேலும்  இணையத்தில் வழக்கமாக  உபயோகிக்கும்  VOIP அழைப்புகளை விட  25சதவிகிதம்  மலிவானதாகவும் உள்ளது.மேலும் புதிதாக ரிங்கோ பயன்பாட்டினை  பயன்படுத்துபவர்களுக்கு 50நிமிட இலவச டாக் டைம்-களும்  மற்றும்  ரிங்கோவை  நண்பர்களுக்கு அறிமுகபடுத்துபவர்களுக்கு  கூடுதலாக 50நிமிட டாக்  டைம்களும் வழங்கப்படுகிறது .

ரின்ங்கோ  பயன்பாட்டினை  ,  VOIP   அழைப்புகளை இந்தியாவெங்கும்  மலிவான விலையில்  பேசி  மகிழவே  உருவாக்கப்பட்டுள்ளதாக   ரிங்கோவின்  தலைமை நிர்வாக அதிகாரி பாவின் துராக்கியா  கூறினார்.இதனால் சர்வதேச அழைப்புகள் மற்றும் உள்நாட்டு அழைப்புகளை  மலிவான விலையில் பெற அனைவரும் ரிங் பயன்பாட்டினை அணுகுவர்  என எதிர்பார்க்கப்படுகிறது .
 

 

You might also like

Comments are closed.