கெப்லர் 47: இரட்டை சூரியனை சுற்றும் மூன்றாம் கோள்

11

அமெரிக்காவில் உள்ள  நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் “உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்” என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை.  ஒரு சூரியனைச் சுற்றும் கோள்களைக் கொண்ட சூரிய குடும்பங்களையோ (Multi-planet systems) , அல்லது இரு சூரியன்களைச் சுற்றும் ஒரே கோளையோ (Circumbinary planetary system) கொண்ட சூரிய குடும்பங்களை கண்டறிந்தது கெப்லர்.நாசா ஏவிய கெப்ளர் விண்ணோக்கி மூலம்  2012ஆம் ஆண்டு  இரட்டைச் சூரியன்களைச் சுற்றும் இரட்டைக் கோள்களை கொண்ட அதிசய குடும்பத்தை கண்டறிந்து அதற்கு கெப்லர் 47 (Kepler 47)  என்று பெயரிடப்பட்டது. கெப்லர் 47  நம் பூமியில் இருந்து சுமார் 3340 ஒளிஆண்டுகள் தொலைவில் இருப்பதாகவும், அதில் இரண்டு கோள்கள் சுற்றிவருவதாகவும் அறியப்பட்டது. தற்போது இந்தக் குடும்பத்தில்  மூன்றாவதாக ஒரு கோள் கண்டறியப்பட்டு உள்ளது .

புதிய கோள்

கெப்லர் -47d என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய கோள்  மற்ற இரண்டு கோள்களுக்கும் இடையே செருகப்பட்டு, பூமியைவிட ஏழு மடங்கு பெரியதாக உள்ளது, இது ஒரு சுற்றுப்பாதையை முடிக்க 187 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.மற்ற இரண்டு கோள்களை விட இது பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்லர் 47 வரலாறு

“இரண்டு சூரியனை  கொண்ட உலகம் கெப்லர்47”

கெப்லர் 47 குடும்பத்தில் உள்ள ஒரு  நட்சத்திரம் நமது சூரியனின் அளவில் உள்ளது. ஆனால், அதன் ஒளி சூரியனைப் போல் அவ்வளவு பிரகாசமாக இல்லை. சூரியனுடன் ஒப்பிடுகையில், சுமார் 84% பிரகாசமாக  உள்ளது.

மற்றொன்றோ, சூரியனில் மூன்றில் ஒரு பங்கு அளவில், 1% -க்கும் குறைவான பிரகாசத்துடன் உள்ளது. ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கே வரும் போது, 7.5 (பூமி) நாட்களுக்கு ஒரு முறை கிரகணங்கள் ஏற்படுகின்றன.

இரட்டை சூரியன்களுக்கு அருகில் உள்ள கெப்லர்  47 b (Kepler-47b) கோள் இவற்றைச் சுற்றி வர சுமார் 50 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இது பூமியைப் போல மூன்று மடங்கு பெரிதாய் இருக்கிறது.  

வெளியில் உள்ள கெப்லர்  47 c (Kepler-47c) நெப்டியூனின் அளவினை விட சிறிது பெரிதாய் இருக்கிறது (பூமியைப்போல 17 மடங்கு). இரு சூரியன்களைச் சுற்றி வர  303 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

“2015 ஆம் ஆண்டில், இந்த குடும்பத்தில் மூன்றாம் கோள் இருப்பதை நாங்கள் கணித்துள்ளோம்.ஆனால்அதற்கு  போதிய சான்று இல்லாத காரணத்தால் அதை வெளியிட இல்லை. உண்மையிலேயே நம் கணிப்புக்கு பொருந்துகிறது என்பதைப் பார்ப்பது பெரியது “என்று வானியல் நிபுணர் நாடர் ஹாகிகிபூர் கூறினார்.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் தொடரும் என விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


You might also like