ios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:
2,819 total views
- ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனத்தினர் வழங்கவிருக்கின்றனர். அதாவது இனிமேல் வாட்ஸ் அப்பில் பாடல்களை கேட்கவும், sent செய்யவும் முடியும் . இச் செய்தி முதல்முறையாக ஜெர்மன் நாட்டினை சேர்ந்த macerkopf.de என்ற வலை தளத்தில் வெளியாகியுள்ளது. பயனர்கள் ஒருவர் பிடித்தமான பாடலை sent செய்தால் எதிர்முனையில் இருப்பவருக்குஒரு சிறிய music player ஐகான் ஒன்று வரும்.அதனை கிளிக் செய்தால், பாடலை கேட்டு ரசிக்கலாம். இதனை ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் மட்டுமே அணுகமுடியும்.
- music மட்டுமல்லாமல் கூடிய விரைவில் மிகப் பெரிய இமோஜிக்கள் மற்றும குரூப் இன்வைட்டுகளையும் (Group invite) செய்து கொள்ளலாம். இவையனைத்தும் ios 10இல் பதிப்பில் வரும் என வாட்ஸ் அப் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் ஒரு கூடுதல் அம்சமாக GIF புகைப்படங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
Comments are closed.