300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்

31

“உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.”

ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

எனவே 300 ஊழியர்களை ஐபிஎம் இந்தியாவிலிருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப திறன் படைத்தவர்களை புதியதாக பணிக்கு எடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலும் அவர்கள் புதிய தொழில்நுட்ப திறனுடன் வரும் போது அவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கும் முடிவில் தான் உள்ளோம் என்று ஐபிஎம் நிறுவனத்திலிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இது ஐபிஎம் நிறுவனத்தில் மட்டும் உள்ள சிக்கல் இல்லை. ஐ.டி., துறை முழுவதுமாகவே புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது இது போன்ற சிக்கலில் ஊழியர்கள் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் ஐபிஎம் நிறுவனத்தில் செய்யப்பட உள்ள இந்த நடவடிக்கையால் இந்திய செயல்பாடுகளில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.

ஏன் இந்த 300 ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்ச்சியை அளித்து தக்கவைத்துக்கொள்ளலாம் என்று ஐபிஎம் நிறுவனத்தைக் கேட்டப் போது, செலவுகள் அதிகமாக இருக்கும். தங்களது மனித வள செலவுகள் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எனவே தான் ஊழியர்களை வெளியேற்றிப் புதிய ஊழியர்கள பணிக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

You might also like