மனித வாழ்க்கை செவ்வாயில் தொடருமா..?

69

நாசா கடந்த பல  வருடங்களாகவே செவ்வாய் கிரகத்தில்  மக்களை  வாழ வைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.விண்வெளி நிறுவனம் 2030 ற்குள்   உலகில்  வாழும் மக்கள் அனைவரும் செவ்வாய்க்கு கொண்டு செல்லும் முயற்சியில்  உள்ளது. கடந்த வாரம் இதை பற்றிய ஆராய்ச்சியை   விளக்கியது. இன்னும் சில வருடங்களில் மக்களை செவ்வாயில்  வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்னும் சில வருடங்களில் மக்களை செவ்வாய்க்கு  அழைத்து வருவதற்காக மட்டுமின்றி தங்க வைக்கும் முறையையும் அணுகி கொண்டிருகின்றனர்.நாசா,  ஆராய்ச்சிக்காக  பல சோதனைகளை  விண்கலத்தின்  மூலம்  சக்தி வாய்ந்த  ராக்கெட்டுகளை    அனுப்பி நிகழ்த்த உள்ளது. அதே போன்ற  சோதனைகளை  நிலவு  மற்றும்  சிறுகோள்களுக்கிடையேயான  சூழ்நிலைகளை பற்றிய  ஆராய்ச்சியையும்   நடத்த உள்ளது.

நாசா ஒரு முன்னோக்கிய சிந்தனையை  கொண்டுள்ளது. அதன்படி  செவ்வாய் கிரகம்  என்பது  ஒரு  அடையக் கூடிய  இலக்கு  என்று கூறுகின்றனர். மேலும்  செவ்வாய் கிரகத்தில் வாழும் சூழ்நிலைகளை  மிக விரைவில் கண்டறிவதாகவும் கூறியுள்ளனர்.Perspective_1-1024x5321-1024x532

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருவள்ளுவர் வாக்க்கிற்கிணங்க  நாசாவில் நீரை கண்டுபிடித்தால் அங்கு ஒரு உலகம் அமைய வாய்ப்புள்ளது.       பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் பல  விண்கலங்களை  அனுப்பி  சோதனையிட்ட பின்  கடந்த மாதம்  உவர் நீர் இருப்பதனை  கண்டறிந்தனர். ஆனால் அது உப்பு நீர்தானே என்று  கேட்கலாம்? ஆம்..  பூமியில்  கூட பல இடர்பாடுகள்  மற்றும் தடைகள்  இருந்தும்  நாம் அனைவரும்  வசிப்பது போலவே செவ்வாயிலும்  மனித உயிர்கள்  வாழ காரணிகள் இருக்கலாம் என்ற நாசா  விஞ்ஞானிகள்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

imagesநாசா முதலில் இண்டர்நேசனல்  ஸ்பேஸ்  அமைப்பை  கொண்டு  ஆராய்ச்சியை  மேற்கொண்டு  வந்தது . அடுத்த  கட்டமாக  ஸ்பேஸ்  லான்ச்  அமைப்பால்  ஆராய்ச்சியை தொடங்க உள்ளனர்.      அப்பலோ  திட்டம்   போல  மனித பயணத்தை  மேற்கொள்ளும் சாதியக் கூறுகளை பற்றி மட்டும்   ஆராயாமல்   அங்கேயே  மனிதர்கள் வசிக்கும்  நிலையை  கொண்டு வர எண்ணியுள்ளது. நாம் எங்கு  நீரை  காண்கிறோமோ  அங்கே  நம் வாழ்க்கையை  தொடரும்  சூழலும்  ஏற்ப்படும். உவர் நீர்  கண்டுபிடிக்கப்பட்டதென்றால்   கண்டிப்பாக  அங்கு பாக்டீரியா   போன்ற  உயிரினாங்களும் வாழ வாய்ப்புண்டு. இதனால்  2030ற்குள்   நாம் செவ்வாய் கிரகத்தில் வாழும் நிலை கண்டிப்பாக  உருவாகும்.

இந்த உவர் நீர் இருக்கிறது   என்ற கண்டுபிடிப்பையே  பல ஆண்டுகளாக பல விண்கலங்களை  அனுப்பி சோதணையிட்டு கண்டுபிடித்தது. இதே போல் இன்னும் சில ஆண்டுகளில்  செவ்வாயும் ஒரு பூமியை போன்ற உயிரனங்கள் வாழும் சாதியக்கூறுகள் கொண்ட ஒரு கோள்  என்பதை  கண்டுபிடிக்கும் என நம்பலாம்.

 

You might also like

Comments are closed.