மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூகுளின் குரல் தேடல் !

149

குரல்களின் மூலம் நாம் நவீன சாதனங்களுடன் தொடர்பு கொண்டு பேசுவது என்பது வியக்கத்தக்க ஒன்றே ! அதிலும் தற்போது கூகுள் அதன் தேடலை ஒருபடி மேலே கொண்டுபோய் அதன் நுட்பத்தை அனைத்து வகை பயனர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்துள்ளது. மேலும் இதுவரை இருந்த ஆப்பிளின் siri பயன்பாட்டினை விட அதிக மகத்துவத்தை மக்களிடையே கூகுள் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதே! கூகுளின் குரல் தேடல் மக்களின் கேள்விகளை சரியாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்த பதில்களை துல்லியமாக தருகிறது .

How-the-Google-app-understands-complex-questions-780x600

தற்போது இன்னும் கூடுதலாக கூகுல் நிறுவனம் அதன் குரல் தேடலை அதிக வலிமைபடுத்தியுள்ளது.அதனால் பயனர்கள் கேட்கும் கடினமான கேள்விகளுக்கும் பயனர்களின் இயல்பான மொழியையும் புரிந்து கொண்டு பதிலளிக்க தயாராக உள்ளது .முதலில் கூகுள் இந்த குரல் தேடலை 2008ல் அறிமுகபடுத்தியது. பின் 2012ல் அறிவு வரைபடத்துடன் கைகோர்த்தது அனைவரும் அறிந்ததே.

இதனால் முதலில் சாதரணமாக ஒரு பிரபலரின் பெயரைக் கூறினால் அவரைப் பற்றிய தகவலைத் தருமளவிற்கு கூகுள் சிறப்புற்றிருந்தது. அதன் பின் ஒரு பிரபலரின் வயதைக் கேட்கும்போது அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் அடியெடுத்து வைத்தது . அதன் பின் கூடுதலாக வெவ்வேறு உள்ளடக்கங்களையும் புரிந்து கொள்ளும் வகையில் மேலும் மேம்படுத்தப்பட்டது .தற்போது இன்னும் கூடுதலாக கூகுள் அதன் குரல் தேடலில் மிகவும் கடினமான கேள்விகளுக்கும் கூட சிறந்த பதிலை துல்லியமாக அளிக்கிறது.

உதாரணமாக
ஜவஹர்லால் நேரு பிறந்தபோது இந்தியாவின் மக்கள் தொகை என்ன?
இந்தியா உலக கோப்பையை வென்ற போது பிரதமராக இருந்தது யார்?
 இது போன்ற கடினமான கேள்விகளுக்குத்தான் கூகுல் பதிலளிக்க தயாராக உள்ளது . மேலும் இன்னும் கூடுதலாக கடினமான கேள்விகளை புரிந்து கொள்ளும் நுட்பத்துடன் கூகுள் குரல் தேடலை அடுத்தடுத்த கால இடைவெளிகளில் களமிறக்க உள்ளதாக  கூகுள்  குழுவினர்  தெரிவித்துள்ளனர்.  பல குரல் தேடல் பொறிகள் இருப்பினும் அவற்றிற்கிடையே சிறந்த தேடலை அளிக்க அதன் தொழில்நுட்பத்தில் ஒருபடி முன்னெடுத்து வைக்கிறது. இந்த புதிதான மேம்படுத்தப்பட்ட குரல் தேடலை அன்றாய்டு மற்றும் ஐபோனில் களமிறக்க உள்ளது.

You might also like