பதிவிறக்கம் செய்யாமலே உங்களுக்கு பிடித்த பயன்பாட்டினை உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தலாம்:

1,191

 736 total views

சாதரணமாக ஒரு பயன்பாட்டினை நாம் அணுக அதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பின் அதனை இன்ஸ்டால் செய்த பிறகே அதனை நாம் பயன்படுத்த முடியும் . ஆனால் கூகுல் தற்போது குரோமுடன் இணைந்து தேடு பொறிகளில் ஒரு புதுவித தேடலை உருவாக்கி உள்ளது.ஆம் ! இதன் மூலம் நாம் நமக்கு விருப்பட்ட பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளமலே அனுபவிக்கும் அம்சம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.அப்படி என்றால் அதற்கு பதிலாக வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ ? என்றால் கண்டிப்பாக இல்லை ஏனெனில் கூகுல் இந்த தேடு பொறியை நேரடியாக உலவிகளிலேயே தர உள்ளது.ஆனால் அனைத்து பயன்பாடுகளும் இதே மாதிரி செயல்படாது . முதற்கட்டமாக ஒன்பது பயன்பாடுகள் மட்டுமே செயல்பட உள்ளது.

டெவலப்பர்கள் இந்த பயன்பாட்டை கூகுள் தேடலின் முன் பக்கத்தில் காட்ட விரும்பினால் அதற்கு அவர்கள் கோடிங்கின் மூலம் சில நுட்பத்தினை செலுத்தி பெற முடியும் .இதற்கு அந்த கூகுளின் தேடல் பொறிகள் குறிப்பிட்ட பயன்பாடுகளின் உள்ளடக்கத்தோடு ஆழ்ந்த தொடர்பை கொண்டிருக்க வேண்டும்.

உதாரணமாக இந்த நுட்பத்தால் ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யாமல் பயன்படுத்தலாம் என்று கூறினால், பயனர்கள் அதனை எளிதில் பயன்படுத்தி பார்த்து பின் அதனை விரும்பினால் அதன் முழு பதிப்பையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அமைத்தால் பயனர்கள் மட்டுமல்லாமல் வணிகர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் பயனர்களிடையே ஒரு பயன்பாட்டினைப் பற்றிய ஒரு ஆர்வத்தை முதலில் உருவாக்க ஏதுவாக இருக்கும் .இதன் மூலம் வணிக ரீதியாக அதிக வாய்ப்புகள் வரும் என சந்தையிலாளர்கள் கணிக்கின்றனர்.மேலும் பயன்பாடுகளை உருவாக்குபவர்கள் தங்கள் பயன்பாடுகளை சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்வதால் பணம் செலவழிகிறது என்று கருதினால் அவர்கள் இந்த கூகுல் தேடல் பொறி மூலம் தங்கள் பயன்பாடுகளை பயனர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த புதிய அம்சத்தை போல 2020-க்குள் 350 பில்லியன் பயன்பாடுகளை பதிவிறக்கமின்றி கூகுளின் தேடு பொறிகளில் அணுகும்படி செய்யப்படும் என கணக்கிட்டுள்ளனர் .

You might also like

Comments are closed.