வாழ்க்கையை முன்னேற்றும் முகநூல்?

137

என்ன முகநூல் வாழ்க்கையை முன்னேற்றுமா? முகநூல் என்பது நேரத்தை வீணடிக்க மட்டுமே.. என்று கருதுபவர்கள் அனைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் அறிமுகப்படுத்துகிறது டெக் பிரீப் (Tech Prep ) வலைதளம் .

சரி தற்போது கணினியை பற்றி கொஞ்சம் பேசலாம். கணினி என்பது பல ஆண்டுகளுக்கு முன் வாழ்வில் பலருக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது .ஆனால் தற்போது ஒவ்வொருவர் வீட்டிலும் 2 மற்றும் 3 கணினிகள் வைத்திருக்கும் வகையில் கணினி உலகம் விரிவடைந்துள்ளது . எங்கு பார்த்தாலும் கணினிதான் டிவியிலும் , அலுவலகத்திலும் , வீட்டிலும் ஏன் வாகனங்களில் கூட அப்படி இருக்கையில் கணினியைப் பற்றிய ஆர்வம் இர்ருப்பவர்கள் கணிணி உலகில் பின்னால் இருந்து செயல்படும் டெவலப்பர்களைப் பற்றியும் அவர்கள் என்னதான் வேலை செய்கிறார்கள்?          ப்ரோக்ராம்மிங் என்றால் என்ன? மேலும் அதை எவ்வாறு நாமும் கற்றுக்கொள்ளலாம் என்பதை பற்றிய தகவலை இந்த வலைதளம் தருகிறது.

 

யாரெல்லாம் கற்றுக் கொள்ளலாம் ?.

இதற்க்கு வயது வரம்பே இல்லை என்பது தான் மகிழ்ச்சியளிக்க கூடிய விசயமாகும்.அதாவது கணினி உலகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதை எளிதில் கற்கலாம் .இதற்க்கு ஆர்வம் மட்டுமே இருந்தால் போதுமானது. ஒவ்வொருவருக்கும் வயது வாரியாக தனித்தனியாக புரிந்து வகையில் ஆரம்ப நிலை, கடின நிலை போன்று தரம் பிரித்து கற்றுத் தரப்படும்.

வாழ்க்கையை முன்னேற்றுமா?

இதன் மூலம் சிறுவயது குழந்தைகள் இன்றிலிருந்து கற்க தொடங்கினால் முதலில் சில எளிதான கணினி மொழிகளையும் மற்றும் போக போக அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் சென்று கணினியின் கோடிங் பற்றிய ப்ரோகிராம்களையும் எளிதில் கற்கலாம். . கூடவே இதில் எதிர்காலத்தில் குழந்தைகள் கணினி துறையில் எப்படி சாதிக்கலாம்? எப்படி வேலை வாய்ப்புகளை பெறலாம்? என்பது போன்ற வழிகாட்டுதல்களையும் தருகிறது.இதில் பெற்றோர்களும் கற்று கொள்ளும் வகையில் பாடங்கள் இருப்பதால் அவர்கள் குழந்தைகளுக்கு கணினி உலகில் சாதிக்க முன்னோடியாகவும் ஒரு உந்து சக்தியாகவும் இருப்பார்.

எனவே முகநூல் பயனர்களே இந்த மாதிரியான கணினி நுட்பத்தை பற்றி படித்து கற்று உங்களை அறிவை வளர்த்து கொள்ளுங்கள் வாசகர்களே. இதனால் முகநூலை என்றுமே பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல் நம் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றி கொண்டு போகும் வழிகாட்டியாக பார்க்கும் வழியை முகநூல் அமைத்து கொடுத்திருக்கிறது உண்மையில் பாராட்டத்தக்கதே ….!

You might also like
1 Comment
  1. Nagendra Bharathi says

    அருமை

Comments are closed.