முகநூல் அறிமுகப்படுத்துகிறது நண்பர்களை கண்டறியும் டூடுல் ஆப் ………..!

398

 784 total views

ஒரு புகைப்படம் நமக்கு பல ஆயிரம் கருத்துகளை சொல்லாமல் சொல்லிவிடும்.மேலும் புகைப்படங்களின் அம்சத்தை கூட்ட முகநூல் விரும்புகிறது. அதனால் தற்போது டூடுள்(doodle) பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது.இதில் புகைப்படங்களை எடிட் செய்தோ ,கிராப் செய்தோ அதன் மீது வரைந்து மகிழும் சிறப்பு பயன்பாட்டை கொண்டுவந்துள்ளது.இந்த புதிய சிறப்பமான doodle அதாவது பொருளற்ற வகையில் நினைத்ததை கிறுக்கும் வகையில் உள்ளது என பொருள்படும் .

doodle-booth-iphone-app
பயனர்கள் பிடித்தமான போட்டோவை பதிவேற்றம் செய்து மற்றும் டூடுளை டேப் செய்து வரையத் தொடங்கலாம் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்க பயனர்கள் விரல்களின் மூலம் வண்ணத்தட்டில் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் பேனாவின் அளவையும் மாற்றிக் கொள்ளலாம்.

இது ஒரு சிறிய பேனா கருவியை கொண்டு முகநூல் அதன் பயன்பாடுகளில் தற்போது இயக்கி வருகிறது.முகநூல் கடந்த வருடம் Messanger மற்றும் புகைப்படத்துடன் ஸ்ட்டிகர்களை ஒட்டி அனுப்புவது போன்ற பயன்பாடுகளை கொண்டுவந்தது .இருப்பினும் முகநூல் புகைப்பட கருவி பயன்பாடுகளான ஸ்நாப் சாட் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுடன் போட்டியிட புகைப்பட கருவிகளின் மத்தியில் மேலும் பல அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

சமூக வலை தளங்களில் ஒவ்வொரு நாளைக்கும் கிட்டத்தட்ட 2 பில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றம் செயப்படுகின்றன.இதில் புகைபடங்கள்தான் முக்கிய அம்சமே…! அதனால் இந்த புகைபடத்தை எடிட் செய்யும் அம்சத்தை வெளிக்கொணர்ந்தால் பயனர்கள் அதிகமாவார்கள் என்பதை முகநூல் நன்கறிந்ததிருக்கிறது.இது தற்போது அன்றாய்ட் மற்றும் ஐபோன்களிலும் நடைமுறைபடுதப்பட்டுள்ளது.

You might also like

Comments are closed.