முதல் போட்டியை தவற விட்ட ஈடன் கார்டன்

417

 1,983 total views

2011  பிப்ரவரி 19 ம் தேதி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவிருக்கிறது .
முதல் போட்டி வாங்கதேச தலைநகர் டாக்கா வில் தொடங்கவுள்ளது .
இதில் இந்திய , வங்கதேச அணிகள் மோதுகின்றன .போட்டி தொடங்க இன்னும் மூன்று வாரங்களே  உள்ள பட்சத்தில் , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அரங்குகளை ஆய்வு செய்யும் குழு போட்டிகள் நடைபெறவிருந்த ஐந்து மைதானங்களின் தயார்நிலை குறித்து 27 பிப்ரவரி அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது .
இக்குழுவில் பி.சி.சி.ஐ -யின் தலைமை நிர்வாக அதிகாரியுஏடன் கார்டன் ல்ம் இயக்குனருமான ரத்னாகர் ரெட்டி இடம்பெற்றிருந்தார் . மும்பை வான்கடே மைதானமும் , இலங்கையில் உள்ள மூன்று மைதானங்களுக்கும் சிற்சில பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தி போட்டிகள் நடக்கும் என்று அறிவித்துள்ளது .
சுமார் 90,000 பேர் போட்டியை காணும் வகையில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்னும் சில புனரமைப்பு பணிகள் நிறைவுறாமல் இருக்கும் பட்சத்தில் பிப்ரவரி 27  – இல் நடைபெறவிருக்கும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி இங்கு நடைபெறாது என்று இக்குழு அறிவித்துள்ளது .
உலககோப்பை போட்டிகளில் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த இந்த மைதானத்தில் முதல் போட்டியைத்தவிர மற்ற மூன்று போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது . இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

You might also like

Comments are closed.