துப்பாக்கியால் சுட்டாலும் எளிதில் ஆறிவிடும் காயங்கள் !

601

 910 total views

                       உலகில் மனித உயிரிழப்புகள் பல விதங்கள் பல கோணங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதே போல் மற்றொரு பக்கம் அதை எவ்வாறு தடுப்பது என்பது போன்ற சிந்தனைகளும் அறிவியல் நுட்பங்களும் கையாளப்பட்டு வருகின்றன. அவ்வழியில் அதிக இரத்தப் போக்கின் காரணமாக நிகழும் உயிாிழப்புகளை கருத்தில் கொண்டு ரேவ்மெட்ஸ் என்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் போரின்போதோ அல்லது பொிய விபத்தின்போதோ மனிதர்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்தும் வண்ணம் ஒரு வகை ஊசியை  கண்டறிந்துள்ளனர்.
இரத்தப்போக்கை கட்டுப்படுத்துமா ஊசி?
இந்த ஊசியில் 92 அழுத்தப்பட்ட நிலையில் உள்ள சின்னஞ்சிறு பஞ்சுகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஊசியை காயம்பட்ட இடங்களில் உட்செலுத்துகையில் இரத்தத்தை உடலைவிட்டு வெளியேறாமல் காப்பாற்றித் தரும்.இந்த கருவி இரண்டு வடிவங்களில் வரவுள்ளது. இரண்டையுமே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.ஒரு துப்பாக்கி குண்டு துளைத்த உடம்பில் செலுத்தும்போது காயத்தின் வழியே இரத்தம் வெளியேறுவதை  பதினைந்தே நிமிடங்களில் தடுக்கப்படுகிறது.   இதனால் காயம்பட்ட மனிதர்கள் இறப்பு போன்ற மோசமான நிலையை அடையாமல் தடுக்கலாம்.
XStat-30-Syringe-RevMedx-3
FDA நிறுவனம்:
           FDA கடந்த வருடம்  இதனை போர்களத்தில் அடிபட்ட  இராணுவ வீரர்களுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதியளித்திருந்தது. தற்போது அனைத்து இனத்தவரும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.  கூடவே FDA நிறுவனம் இந்த ஊசியை சில நிபந்தனைகளை  விதித்து, பயன்படுத்த கூறியுள்ளது.  உதாரணமாக   ஊசியை   அதிக இரத்த போக்கின் போதோ உயிருக்கு ஆபத்தான  நிலையில் மருத்துவமனைக்கு செல்ல சில மணி நேரங்கள் ஆகும் என்றபோது  மட்டுமே  பயன்படுத்த வேண்டும் என்று  கூறியுள்ளனர்.
XStat-30-Syringe-RevMedx-4
இந்த ஊசியினால் காயங்கள் உடனே குணப்படுத்தி விட முடியும்.மேலும் பயணங்களின் போதும்  திடிரென்று ஏற்படும் விபத்துகள்  போன்ற அவசரகாலங்களில் கைகொடுப்பதாக அமையும். மேலும்  பள்ளிகளிலோ அல்லது  மற்ற பொது இடங்களிலோ  ஏற்படும்  விபத்துகளின்  போது  பஞ்சு நிரப்பப்பட்ட  ஊசியினை  பயன்படுத்தினால் விபத்தினால் காயமடைந்தவருக்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரையில்  மிகச் சிறந்த முதலுதவியாக  அமையும். ஆகையால் கூடுமானவரை அதிக இரத்தப் போக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை  தடுக்கலாம்.

You might also like

Comments are closed.