காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம் :

48

இதுவரை வீட்டிலேயே தேநீர் தயாரிக்கும் இயந்திரம்,சுடுநீர் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் பழச்சாறுகள் தயாரிக்கும் நிறுவனம் போன்றவற்றை மட்டுமே பார்த்திருப்போம்.குளிர்பானங்கள் தயாரிக்கும்  நிறுவனமான கியூரிக் தற்போது காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை  வீட்டிலேயே தயாரிக்க வழி  செய்துள்ளது. இதன் வழியாக  வீட்டிலேயே குளிரபானங்களை  பருகி மகிழலாம். இந்த இயந்திரத்தின் விலை  $370 என நிர்ணயித்துள்ளனர்.மேலும்  இயந்திரங்களிலிருந்து வரும் குளிரபானங்களை  பருக  குப்பிகளை மட்டும்  அவ்வப்போது வாங்க வேண்டி இருக்கும். நமக்கு பிடித்தமான குளிர்பான வகைகளான ஸ்ப்ரிட்  அல்லது கோகோ கோலா போன்ற  தேவைப்பட்ட குளிரபானங்களை  இந்த இயந்திரத்தின் உதவியோடு பருகி மகிழலாம்.நம் வீட்டின்  தோட்டத்தில் விளையாடும் போதும்  வீட்டு விசேசங்களின்  போதும் கூட பிடித்த பானங்களை அருந்திக் கொள்ள  ஏற்றதாகவும் இருக்கும். நம் நாட்டினைப் பொருத்தவரையில்  இதன் விலை மலிவான பிறகு அலுவலகங்களில் தேநீர் இயந்திரத்தோடு கூடவே இது போன்ற இயந்திரங்களையும்  காணும் சாத்தியமுண்டு.

You might also like