உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்

40

பிரபல ஐ.டி நிறுவனமான காக்னிசென்ட் சுமார் 300-400உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் காக்னிசென்ட் தனது செலவுகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உயர் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து சில மாதங்களுக்கு முன்பு voluntary separation package (VSP) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.இத்திட்டத்தின் வாயிலாகப் பல வருடங்கள் அனுபவத்துடன் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய assistant vice-presidents மற்றும் VPs உட்பட 300 ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி, பணியிலிருந்து விலக விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு, ஓர் ஆண்டுக்கான ஊதியம் மற்றும் அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளுக்கேற்ப பங்கு சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுமெனத் தெரிகிறது.

காக்னிஜன்ட் தலைமைச் செயல் அதிகாரியாக ப்ரையன் ஹம்ப்ரைஸ் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பொறுப்பேற்றார். இதன்பிறகுதான் அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன.மேலும்   

கடந்த சில காலாண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டதால் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மட்டத்தில் ஆட்குறைப்பு செய்யப்போவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மேல்மட்ட அளவிலும் ஆர்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஐ.டி நிறுவனங்களைப் பொறுத்தவரை இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் வழக்கமான ஒன்றுதான்.

You might also like

Comments are closed.