4 மடங்கு அதி வேகத்துடன் புதிய Fujitsu Tablet

816

 1,505 total views

Los Vegas-ல் நுகர்வோர் மின்னனுபொருள் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய gadget-களை அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினர். இந்த கண்காட்சி முடிந்த பிறகும் பல நிறுவனங்கள் தங்களது புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் Fujitsu நிறுவனம் தனது புதிய Tablet-ஐ இப்போது அறிவித்திருக்கிறது. அந்த Tablet-ன் பெயர் Fujitsu Stylistic M532 ஆகும். இந்த Tablet 1280 X 800 Pixel resolution, 10.1 inch display, 8 Mega Pixel கொண்ட பின்பக்க கேமராவும் 3 Mega Pixel கொண்ட முகப்பு கேமராவும் கொண்டிருக்கிறது. சேமிப்பு வசதியைப் பார்த்தால் 16 GB internal சேமிப்பைக் கொண்டுள்ளது. அதோடு இதன் processor 3 Tegra Silicon Processor ஆகும்.

இதன் கடிகார வேகம் 2ஜிஹெர்ட்ஸாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதன் வேகம் single core processor-ன் வேகத்தைவிட 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் multimedia editing வேலைகளை இந்த Tablet-ல் மிக எளிதாக அதே நேரத்தில் விரைவாக செய்ய முடியும்.

இந்த Tablet-ன் முன்புறம் திரை இருக்கிறது. Video calling செய்யக் கூடிய முகப்பு கேமரா இதன் உச்சியில் உள்ளது.இதன் முக்கிய கேமரா LED flash வசதியைக் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் USB போர்ட்டுகள் உள்ளன. இதனை இயக்குவதும் மிக எளிதாக இருக்கும். விலையைப் பார்த்தால் இந்த Tablet ரூ.34,000க்கு கிடைக்கும்.

You might also like

Comments are closed.