போக்குவரத்து நெரிசலில் இருந்து முன்கூட்டியே தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

672

 1,009 total views

முன்னாடியே தெரிந்திருந்தால் வேறு பாதையில் வந்திருக்கலாமே என்று புலம்பியதுண்டா? அப்படியானால் இனி கவலை வேண்டாம் உங்களிடம் ஐபோனே அல்லது அன்ராய்டு போன் உள்ளதா ? ஆம் கூகுளின் வரைபட பயன்பாட்டை பற்றி அனைவரும் அறிந்ததே! அதில் இதற்கு முன் இணையமில்லா கூகுள் வரைபட பயன்பாடுகள் , பெட்ரோலின் விலையைச் சொல்லும் பயன்பாடுகள் என அறிமுகபடுத்தியிருந்தது. தற்போது நாம் செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து வழிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளை முன் கூட்டியே அறிந்து அதனைப் பற்றி பயனர்களுக்கு தெரிவிக்கும் ஒரு புதுவகையான பயன்பாட்டை அரிமுகபடுத்தியுள்ளது.

9888bfbf-058b-49bd-ae36-98336764c5e9மிக நெருக்கடியான போக்குவரத்து சூழ்நிலைகளை முன்கூட்டியே அறிந்து பயனர்களுக்கு ஒரு மாற்றுப்பாதையை உருவாகும்படி செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் ஒரு சிறந்த வழியை தேர்ந்தேடுக்கும் ஒரு அனுபவத்தைப் பெறலாம் .

இதில் நீங்கள் வெளியே செல்லுவதற்கு முன்னர் செல்லும் வழியில் உள்ள இடர்பாடுகளையும் நெரிசல்கள் அல்லது ஏதேனும் விபத்துகள் நடந்திருப்பின் அதைப் பற்றிய அனைத்து எச்சரிக்கை மற்றும் தகவலையும் ஒரு சுருக்கமான செய்தியாக பயனர்களுக்கு தருகிறது . இது பார்ப்பதற்கு ஒரு சிறிய பயன்பாடாக இருந்தாலும் பயனர்களிடையே ஒரு மிகபெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் இந்த வரைபட பயன்பாடு சமீபகாலமாகவே ஒவ்வொறு அம்சமாக சேர்த்துகொண்டே செல்வது ஐபோன் மற்றும் அன்ட்ராய்டு பயனர்களை பொறுத்த வரையில் ஒரு நற்செய்தியே!

You might also like

Comments are closed.