பராக் ஒபாமா மிட் ரோம்னியை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி !

30

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது.  தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமாவும், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா 303 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். குடியரது கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி 203 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றுள்ளார். மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது டுவிட்டர் இணையதளத்தில் ஒபாமா நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம்;  அதற்கேற்ப வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது நன்றியினை தெரிவித்துள்ளார். ஒபாமா, மிட் ரோம்னியின் சொந்த மாநிலமான மசாசூசெட்ஸிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து ஒபாமா கூறும்போது, மக்களுக்கு பணியாற்ற கிடைத்த அரிய வாய்ப்பு.  நான் மாகாண உறுப்பினராகவும், அமெரிக்க செனட்டராகவும் பொறுப்பு வகித்ததோடு தற்போது அதிபராகவும் பதவி வகிக்கிறேன்.  மேலும், மக்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நான் ஒவ்வொரு முறையும் நினைவுபடுத்தி கொள்வேன்.  நான் அவர்களின் பிரதிநிதி.  அவர்களின் சேவகன் என தெரிவித்துள்ளார்.  அதனுடன் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கிய தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மிட் ரோம்னிக்கும் ட்விட்டர் இணையதளம் வழியாக தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

You might also like

Comments are closed.