நமது மூதாதையாரின் நினைவுகளை சேமித்து வைக்க உதவும் பயன்பாடு:
813 total views
நவீன காலத்தில் ஆண்ட்ராய்டில் பல பயன்பாடுகள் வெளிவந்து கொண்டிருப்பினும் அவையனைத்துமே இளையதலைமுறையை குறிவைத்து வெளியிடுவதாகவே உள்ளது. இதனால் நமது முன்னோர்களும் மூதாதையார்களும் ஸ்மார்ட் போன்களின் நுட்பத்தை உணர முடியாமலே போகிறது. இதனை ஈடுகட்டுவதற்காகவே ஸ்டோரி கார்ப்ஸ் ஒரு புதுவகை பயன்பாட்டினை உருவாக்கியுள்ளனர்.
இது இளம் வயதினர்கள் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நேர்காணல் போன்ற நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறது. இதில் பல கேள்விகளுக்கு மூதாதையர்கள் பதிலளிக்கும் விதமாக உள்ளது . இந்த நேர்காணலை உங்கள் நண்பர்களுடனும் குழுவினருடனும் பகிர்ந்து கொள்ளாலாம். நேர்காணலில் “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணங்களை பற்றி சொல்ல முடியுமா? உங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள்? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவத்தை பகிருங்கள்? போன்ற கேள்விகளும் இதில் அடங்கும்.
உதாரணமாக 1945 இல் நடந்த ஒரு போரைப் பற்றி அறிந்து கொள்ள இணையத்தை அணுகினாலே போதுமானது . ஆனால் நமது சொந்த தாத்தா , பாட்டியின் வரலாற்றை நாம் தான் அறிந்து சேமித்து வைக்க வேண்டும் . அவையணைத்துமே நமக்கு பின்னர் வரும் தலைமுறையினருக்கு விலைமதிக்க முடியாத பொக்கிசங்களே!
இந்த பயன்பாட்டை முழுக்க முழுக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கவரும் விதமாக உருவாக்கியுள்ளனர் .இதுபோன்ற பயன்பாட்டால் நம் குடும்பத்தைப் பற்றிய ஒரு வரலாற்று நூலகத்தை நாமே உருவாக்கியதைப் போன்ற ஒரு அனுபவத்தைப் பெறலாம் .பல நாட்களுக்குப் பின் இந்த நூலகத்தை புரட்டி பார்க்கையில் கண்டிப்பாக அது ஒரு மறக்கமுடியாத நினைவினை கண் முன் கொண்டு வந்து சேர்க்கும் .
ஸ்டோரி கார்ப்ஸ்ஸில் இந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பிடித்தமான கேள்விகளுடன் கூடிய நேர்காணலை தேர்ந்தேடுத்து பின் அந்த நேர்காணலை நூலகத்தில் சேமித்து பயன்பெறுங்கள் வாசகர்களே!
Comments are closed.