தனது குழந்தையை இழந்ததால் மற்ற குழந்தைகளை பாதுகாக்க சிந்தித்த மனித நேயம் உள்ள பெற்றோர்!
2,228 total views
தனது இளம்குழந்தையை காரில் பறிகொடுத்த பெற்றோர் அதை நினைவில் கொண்டு இது போல் நிகழாமல் மற்ற குழந்தைகளை காப்பது எப்படி என சிந்திக்கதொடங்கினர்.
Rogers-Seitz என்பவர் தனது 15 மாத ஆண்குழந்தையை தினமும் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் விட்டு விட்டு தனது வேலைக்கு செல்வார். மாலை வீடு திரும்பும் போது தனது குழந்தையை அழைத்து வருவார். ஜுலை 6ஆம் தேதி வழக்கம் போல அழைத்து வரும் போது பின் சீட்டில் இருந்த குழந்தை அதிகவெப்பதால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து மிக விரைவாக மருத்துவமனை நோக்கி பயணித்தார், ஆனால் அதிக வெப்பத்தால் குழந்தை இறந்தது. பொதுவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காரில் வெப்பக்காற்று தரும் கருவியையே அதிகம் பயன்படுத்துவர். காற்றின் வெப்ப நிலை வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருந்தாலும் பெரியவர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் , ஆனால் குழந்தைகளின் உடலில் அது பாதிப்பை ஏற்ப்படுத்தும். (Child vehicular heat stroke death)
தனது மகன் இறந்த சோகத்திலும் மனிதாபிமானம் மிக்க அந்த பெற்றோர், இது போல மற்ற குழந்தைகள் இறந்து போகக் கூடாது என நினைத்தனர். அதனைத் தடுக்க சிந்திக்கத் துவங்கினர். Rogers Seitzசும் அவரது கணவரும் தொழில்நுட்ப வசதியின் மூலம் இதனைச் சரி செய்ய முடியும் என்று நம்பினர். காரின் வடிவமைப்பிலே சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தனர்.
வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் கருவியை இயல்பிலேயே கார்களின் அடிப்படை உதிரி பாகங்களில் ஒன்றாக இணைப்பதன் மூலம் நாம் இதனை சரி செய்ய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். அரசு இது தொடர்பான விழிப்புணர்வு பரப்புரைகளை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை எழுப்புகிறார்.
மேலும் வாகன தாயாரிப்பு நிறுவனங்கள் தரமான தயாரிப்புகளை வழங்க வேண்டும், குறிப்பாக இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் கருவிகளில் பழுது ஏற்படாத வகையில் தரமாக தயாரிப்பது, தரக்கட்டுப்பாடு சட்டங்கள் இயற்றுவது, தரக்கண்காணிப்பு ஆணையங்கள் அமைப்பது போன்றவை இதில் முக்கியமான கோரிக்கைகளாகும்.
இதில் தவறு நடக்கும் போது அதனைச் சரி செய்ய இழப்பீடு மசோதாக்கள் நிறைவேற்றுவது உள்ளிட்ட, அது தொடர்பான சட்ட நிபுணர்களுடம் இணைந்து செயல்படுவது போன்ற ஆலோசனைகளை இவர்கள் அரசுக்கும் வாகனத் தயாரிப்பளர்களுக்கும் கொடுகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் KidsAndCars.org என்ற இணையதளத்தின் மூலமாக தன்னார்வளர்களுடன் இணைந்து செயல் படுகின்றனர். இதுவரை 500க்கும் மேலான குழந்தைகள் இந்த பிரச்சனையால்(Child vehicular heat stroke death) இறந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரிவிக்கின்றனர். இனிமேல் இது போல நடக்காமல் இருக்க மனிதாபிமான மிக்க இந்தத் தம்பதியின் முயற்சியை வாழ்த்துவோம்.
Comments are closed.